Header Ads



முகக்கவசம் அணிய ஒருபோதும் அறிவிக்கவில்லை, சீனர்களுக்கு பயணத்தடை விதிப்பது பொறுத்தமானதல்ல

(எம்.மனோசித்ரா)

உலகலாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வந்தாலும் இலங்கையில் அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் பாராதூரமான நிலைமை கிடையாது என சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்தார். 

சுகாதார அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று -03- நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது : 

கொரோனா வைரஸ் சீனாவில் தீவிரமாக பரவி வருகின்றது. அதே போன்று ஏனைய சில நாடுகளிலும் இணங்காணப்பட்டுள்ளது. ஆனால் இலங்கையில் இது வரையில் அவ்வாறான பாரதூரமான நிலைமை எதுவும் ஏற்படவில்லை. வைரஸ் தொற்று பரவுவதைத் தடுப்பதற்கான அதி உயர் நடவடிக்கைகள் அனைத்தும் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

மேல் மாகாண ஆளுனர், இராணுவம், விமானப்படை, குடிவரவு - குடியகழ்வு திணைக்களம் உள்ளிட்டவற்றின் அதிகாரிகளை உள்ளடக்கி அமைக்கப்பட்டுள்ள தேசிய செயற்பாட்டு குழு தினமும் விமான நிலையத்தில் கூடி நிலைமைகளை ஆராய்கிறது. பயணிகள் மாத்திரமின்றி சேவையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளின் சுகாதார பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

எனவே சாதாரண தடிமன் அல்லது இருமள் என்பவற்றுக்குள்ளானோர் முகக்கவசம் அணிவது வழமையாகும். அவர்கள் தமது பாதுகாப்பிற்காகவும் ஏனையோருக்கு அசௌகரியம் ஏற்படக் கூடாது என்பதற்காகவும் முகக் கவசம் அணிந்திருக்கலாம். ஆனால் ஆரோக்கியமாக இருப்பவர்கள் முகக்கவசம் அணிய வேண்டியது அநாவசியமானதாகும். இவ்வாறு மக்கள் அநாவசிய பீதியடைத் தேவையில்லை. முகக் கவசத்தை அணியுமாறு சுகாதார அமைச்சு ஒரு போதும் அறிவிக்கவில்லை. 

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இணங்காணப்பட்ட சீனப் பெண்ணும் தற்போது முழுமையாக குணமடைந்துள்ளார். எனினும் அவர் சிகிச்சை பெற்று வைத்தியசாலையில் எப்போது செல்ல வேண்டும் என்பது தொடர்பில் அவருக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியர்களே தீர்மானிப்பர். 

இலங்கையுடன் நீண்ட காலமாக நட்புறவை பேணும் நாடாக சீனா காணப்படுகிறது. ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் சீன அரசாங்கத்துடன் கொண்டு அந்நியோன்யமான உறவுகளினாலேயே 33 மாணவர்களை விரைவில் நாட்டுக்கு அழைத்து வரக் கூடியதாக இருந்தது. 

உள்நாட்டு யுத்தத்தின் போது தேசிய பாதுகாப்பு சபையில் அங்கத்தும் வகித்த நாடுகளில் சீனாவே முதலில் இலங்கைக்கு உதவியது. எனவே அவ்வாறான விடயங்களை மறந்து அந்நாட்டுக்கு பயணத்தடை விதிப்பது பொறுத்தமானதாக இருக்காது என்றும் அவர் கூறினார்.

2 comments:

  1. Chinese tourists must provide medical certificates stating they are healthy and free of infection from the novel coronavirus

    ReplyDelete
  2. This is not the time to think of chinese help and the relation we have now the priority is our people life. Neighboring Honk kong seals its border. So we have to priotise OUR SAFETY FIRST

    ReplyDelete

Powered by Blogger.