Header Ads



செயற்­குழுக் கூட்­டத்தில் நடந்தது என்ன

எதிர்­வரும் பொதுத்­தேர்­தலில் அன்னம் சின்­னத்தில் போட்­டி­யி­டு­வ­தற்கு ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான அணி­யி­னரும் எதிர்க்­கட்சித் தலைவர் சஜித் பிரே­ம­தாச தலை­மை­யி­லான அணி­யி­னரும் இணங்­கி­யி­ருந்­த­போ­திலும் அதற்கு செயற்­குழுக் கூட்­டத்தில் நேற்று அங்­கீ­காரம் வழங்­கப்­ப­ட­வில்லை.

சஜித் தலை­மை­யி­லான ஐக்­கிய மக்கள் சக்தி அர­சியல் கூட்­ட­ணிக்கு அன்னம் சின்­னத்தை வழங்­கு­வது தொடர்பில் தேர்தல் திணைக்­க­ளத்தின் ஆலோ­ச­னை­யினை முதலில் பெற­வேண்டும் என்றும் அதன் பின்னர் இதற்­கான அங்­கீ­கா­ரத்தை வழங்­கலாம் என்றும் ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­துள்ளார்.

ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் ஐக்­கிய தேசியக் கட்­சியின் செயற்­குழுக் கூட்டம் நேற்று கட்­சியின் தலை­மை­ய­க­மான சிறி­கொத்­தாவில் நடை­பெற்­றது. காலை 10 மணி முதல் 11.30மணி­வரை நடை­பெற்ற இந்தக் கூட்­டத்தில் பொதுத் தேர்­தலை அன்னம் சின்­னத்தில் சந்­திப்­பது தொடர்பில் கலந்­து­ரை­யா­டப்­பட்­டது.

இதன்­போது அன்னம் சின்­னத்தில் பொதுத்­தேர்­தலை சந்­திக்­கலாம் என்று சஜித் அணியைச் சேர்ந்த பல உறுப்­பி­னர்­களும் கருத்­து­களைத் தெரி­வித்­துள்­ளனர். ஆனால் ரணில் அணியைச் சேர்ந்த உறுப்­பி­னர்கள் யானைச் சின்­னத்தில் தேர்­தலை சந்­திப்­பதே சிறந்­தது என்று கருத்து தெரி­வித்­துள்­ளனர்.

எம்பி.க்களான நவின் திசா­நா­யக்க. தயா கமகே. ருவன் விஜ­ய­வர்­தன. பாலித ரங்கே பண்­டார உட்­பட பலரும் இத்­த­கைய கருத்­து­களை தெரி­வித்­துள்­ளனர். பொதுக் கூட்­ட­ணி­யாக அன்னச் சின்­னத்தில் போட்­டி­யிட்­டாலும் நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் யானைச் சின்­னத்­தி­லேயே போட்­டி­யி­ட­வேண்­டு­மென்று நவின் திசா­நா­யக்க எம்.பி. யோசனை முன்­வைத்­துள்ளார். இதே­போன்று அம்­பா­றையில் யானைச் சின்­னத்­தி­லேயே போட்­டி­யி­ட­வேண்­டு­மென தயா கமகே எம்.பி. வலி।­யு­றுத்­தி­யுள்ளார்.

இங்கு கருத்து தெரி­வித்த ருவன் விஜ­ய­வர்­தன எம்.பி. தொடர்ச்­சி­யாக நாம் யானைச் சின்­னத்­தி­லேயே கள­மி­றங்கி வரு­கிறோம். தேர்தல் நெருங்­கு­வதால் எந்தச் சின்­னத்தில் போட்­டி­யி­டு­வது என்­பதில் உட­ன­டி­யாக தீர்­மானம் எடுக்க வேண்டும் என்று தெரி­வித்­துள்ளார்.

எம்.பி.க்களான ரவிந்­திர சம­ர­வீர, திலிப் ஆராய்ச்சி உட்­பட பலரும் கட்­சியின் தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் செயற்­பாட்டை விமர்­சித்­த­துடன் சின்னம் தொடர்பில் உட­னடி தீர்­மானம் எடுக்­க­வேண்டும் என்றும் வலி­யு­றுத்­தி­யுள்­ளனர்.  

இத­னை­ய­டுத்து புதிய கூட்­டணி அன்னம் சின்­னத்தில் போட்­டி­யி­டு­வது தொடர்பில் தேர்தல் ஆணைக்­கு­ழுவின் ஆலோசனை பெறப்பட வேண்டும். அந்த ஆலோசனையைப் பெற்றுக்கொண்ட பின்னர் அடுத்த செயற்குழுக் கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என்று கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார். இதனையடுத்து கூட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

No comments

Powered by Blogger.