Header Ads



ஆபிரிக்க வெட்டுக்கிளிகள் இலங்கைக்கு வரும் ஆபத்து, அவதானத்துடன் இருக்க வேண்டும்...!

ஆபிரிக்காவில் உள்ள பாலைவன வெட்டுக்கிளிகள் இலங்கைக்கு வரும் ஆபத்து இருப்பதால், கமத் தொழிலாளர்கள் இது தொடர்பாக அவதானத்துடன் இருக்க வேண்டும் என கமத்தொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வெட்டுக்கிளி தொடர்பான விபரங்கள் மற்றும் பயிர்களுக்கு சேதத்தை ஏற்படுத்தும் விதம் குறித்து இன்று முதல் கமத்தொழிலாளர்களுக்கு தெளிவுப்படுத்தும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க உள்ளதாக திணைக்களத்தின் தகவல் மற்றும் தொடர்பாடல் நிலையத்தின் ஊடக ஒருங்கிணைப்பாளரான உதவி கமத்தொழில் பணிப்பாளர் சனத் எம். பண்டார தெரிவித்துள்ளார்.

கூட்டமாக இந்த வெட்டுக்கிளிகள் திரியும். அவை மரங்களில் உள்ள பட்டைகள், பயிர்களை பெருமளவில் அழிக்கும். ஆபிரிக்காவில் இருக்கும் வெட்டுக்கிளிகள் தற்போது இந்தியாவில் இருப்பதாக தெரியவந்துள்ளது. இதனால், காற்றின் ஊடாக இலங்கைக்கு வரும் ஆபத்து இருக்கின்றது.

கூட்டம் கூட்டமாக வெட்டுக்கிளிகள் காணப்பட்டால், உடனடியாக அது குறித்து பிரதேசத்தில் உள்ள கமத்தொழில் அதிகாரிகளுக்கு அறிவிக்குமாறு கோரிக்கை விடுப்பதாகவும் சனத் எம். பண்டார குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. ...ஆகவே அவர்கள் மீது, கனமழையையும், வெட்டுக்கிளியையும், பேனையும், தவளைகளையும், இரத்தத்தையும் தெளிவான அத்தாட்சிகளாக (ஒன்றன்பின் ஒன்றாக) அனுப்பி வைத்தோம் - ஆனால் அவர்கள் பெருமையடித்து குற்றம் புரியும் சமூகத்தாராகவே ஆகியிருந்தனர்.
    (அல்குர்ஆன் : 7:133)
    www.tamililquran.com

    ReplyDelete

Powered by Blogger.