Header Ads



கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்த தாய்லாந்து, எயிட்ஸ் மருந்ததை கலந்து கொடுத்ததாக தெரிவிப்பு

உலகை அச்சுறுத்தும் ஆட்கொல்லி நோயான கொரோனா வைரஸினை கட்டுப்படுத்தும் மருந்து கண்டுபிடித்துள்ளதாக தாய்லாந்து அறிவித்துள்ளது.

இந்த மருந்தினை டொக்டர் கிரிங்கஸ்க் தலைமையிலான வைத்திய குழு கண்டுபிடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட பெண்ணொருவருக்கு கடுமையான காய்ச்சலுக்கு கொடுக்கும் தடுப்பு மருந்துடன் எயிட்ஸ் நோய்க்கு கொடுக்கும் மருந்ததையும் கலந்து கொடுத்துள்ளனர்.

இரு வகையான மருந்துகளும் கலந்து கொடுத்தமையினால் குறித்த பெண் குணமடைந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

சீனாவை சேர்ந்த 71 வயதான பெண்மணிக்கே இந்த மருந்து கொடுத்த நிலையில் குணமடைந்துள்ளார். குறித்த பெண்மணி சீனாவிலிருந்து தாய்லாந்து வந்திருந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானார்.

ஹொங்கொங் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டது. வைத்தியர்களின் புதிய கண்டுபிடிப்பின்படி அவர் 48 மணி நேரத்திற்குள் காப்பாற்றப்பட்டுள்ளார்.

சீனாவின் வுஹான் மாநிலத்தில் பரவிய கொரோனோ வைரஸ் இன்று உலகம் முழுவதும் பரவி வருகிறது. சீனாவுக்கு அடுத்தபடியாக தாய்லாந்தில் அதிகளவானோர் இந்த வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வைரஸ் தாக்கம் காரணமாக இதுவரை 360 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.