Header Ads



பரபரப்பாக கூடும் ஐதேக செயற்குழு, நீக்கப்பட்டவர்கள் மீண்டும் இணைக்கப்படுவார்களா...

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று திங்கட்கிழமை மாலை 4 மணிக்கு கட்சித் தலைமையகமான சிறிகொத்தாவில் கூடவுள்ளது.

இதன் போது ஐக்கிய தேசிய முன்னணியில் பொதுத் தேர்தல் தொடர்பில் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராயப்படவுள்ளதாக பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார். 

இதற்கமைய பொதுத் தேர்தலை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்படவுள்ள புதிய முன்னணியின் பொதுச் செயலாளராக பெயரிடப்பட்டுள்ள ரஞ்சித் மத்தும பண்டாரவுக்கு இன்றைய  செயற்குழு கூட்டத்தில் அனுமதி கிடைக்கப்பெறவுள்ளது. 

கடந்த 30 ஆம் திகதி கூடிய செயற்குழு கூட்டத்தில்ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவராகவும்  பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராகவும் சஜித் பிரேமதாசவை நியமிக்க இணக்கம் காணப்பட்டது.  

ஏற்கனவே கட்சியின் செயற்குழுவின் கால எல்லை டிசம்பர் மாதம் 31 ஆம் திகதியுடன் முடிவுக்கு வந்தது. புதிய ஆண்டின் முதலாவது கூட்டம் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கூட்டப்ப  நிலையில் செயற்குழுவிற்கான புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். 

இதன்போது புதிதாக நியமிக்கப்பட்ட செயற்குழுவில் கட்சியின் 59 உறுப்பினர்கள்  அங்கத்தவர்களாக  தெரிவு செய்யப்பட்டு பொறுப்புகளுக்கு நியமிக்கப்பட்டனர்.  

கடந்த செயற்குழு கூட்டத்தில் ரோசி சேனாநாயக, இம்தியாஸ் பாக்கிர்மாக்கர், உள்ளிட்ட ஏழு பேரின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை என்பதோடு,  பிரதான உறுப்பினர்களான சரத் பொன்சேகா மற்றும் அஜித் பி பெரேரா ஆகிய இருவரும் தற்காலிகமான நீக்கப்பட்டனர். 

இது குறித்தும் இன்றைய செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 6 ஆம் திகதி வியாழக்கிழமை மீண்டும் செயற்குழுவை கூட்டி இறுதியான சில தீர்மானங்கள் எடுக்க எதிர்பார்த்திருந்த போதிலும் பின்னர் இன்று வரை ஒத்தி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். 

No comments

Powered by Blogger.