Header Ads



முஸ்லிம்களுக்கு எதிரான டெல்லி கலவரம், ஐ.நா. பொதுச்செயலாளர் கவலை


குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் தலைநகர் டெல்லியில் நடைபெற்ற போராட்டங்களில் வன்முறை வெடித்தது. வடகிழக்கு டெல்லியில் உள்ள ஜாஃப்ராபாத், மாஜ்பூர், சந்த்பாக், குரேஜ்காஸ், பாஜன்புரா ஆகிய பகுதிகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முதல் சி.ஏ.ஏ ஆதரவாளர்களுக்கும், சி.ஏ.ஏ எதிர்ப்பாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.

இதையடுத்து போலிஸார் தடியடி நடத்தி, கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசி கலவரத்தைத் தடுக்க முயற்சித்தனர். ஆனாலும் தொடர்ந்த வன்முறையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கலவரம் ஏற்பட்டுள்ள டெல்லியின் நிலைமை கவலை அளிப்பதாக ஐ.நா. செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. கவலை தெரிவிப்பதற்கு ஒரு ஐ.நா? உலக அவலத்தின் அடையாளமே ஐ.நா.

    ReplyDelete

Powered by Blogger.