Header Ads



மைத்திரிபால நாட்டுக்கு ஏற்படுத்திய அழிவுக்கு மன்னிப்பு வழங்க முடியாது

தனது நிலைப்பாட்டில் இன்னும் மாற்றமில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கூட்டணியில் இணைத்துக்கொண்டமையை தான் எதிர்ப்பதாகவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் கூட்டணி அமைப்பது பிரச்சினையில்லை. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கூட்டணியில் பெயரளவிலான பதவியை வழங்கியதையும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன முன்னணியின் தவிசாளராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமிக்கப்பட்டமை தொடர்பாக கருத்து வெளியிடும் போதே அமைச்சர் ரணதுங்க இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் பொதுஜன பெரமுனவும் இணைந்து கூட்டணியை ஏற்படுத்தினால், தாமரை மொட்டுச் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்றே நான் ஆரம்பத்தில் இருந்து கூறி வருகின்றேன்.

முன்னாள் ஜனாதிபதிக்கு இணைத் தலைவர் பதவியை வழங்குவதை நான் எதிர்த்தேன். சுதந்திரக் கட்சியுடன் கூட்டணி தேவையில்லை என்றே நான் தற்போதும் கூறுகின்றேன். தாமரை மொட்டுச் சின்னத்தில் தனித்து போட்டியிட்டு வெற்றி பெற முடியும்.

நாட்டுக்கு தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொறுப்புக் கூற வேண்டும். மைத்திரிபால சிறிசேனவை கூட்டணியில் இணைத்துக்கொண்டதை பொதுஜன பெரமுனவில் உள்ள பெரும்பாலானவர்கள் விரும்பவில்லை.

எனது இந்த நிலைப்பாட்டில் மாற்றமில்லை. மைத்திரிபால சிறிசேன ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து நாட்டுக்கு ஏற்படுத்திய அழிவுக்கு தனிப்பட்ட ரீதியில் மன்னிப்பு வழங்க முடியாது எனவும் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. நாட்டுக்கு தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொறுப்புக் கூற வேண்டும். மைத்திரிபால சிறிசேனவை கூட்டணியில் இணைத்துக்கொண்டதை பொதுஜன பெரமுனவில் உள்ள பெரும்பாலானவர்கள் விரும்பவில்லை.........உண்மை மைத்ரீயை விரும்பாத மொட்டு வாக்கு யாருக்கும் போக வாய்ப்பில்லை

    ReplyDelete

Powered by Blogger.