Header Ads



சர்வதேச யாழ்ப்பாணம் முஸ்லிம் சமூக ஏற்பாட்டில், ஒஸ்மானியாக் கல்லூரியில் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் கௌரவிப்பு

கடந்த வருடம் (2019) யாழ் ஒஸ்மானியாக் கல்லூரியில் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றி சிறந்த பெறுபேற்றுக்களை பெற்றுக் கொண்ட மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு சர்வதேச யாழ்ப்பாணம் முஸ்லிம் சமூகத்தின் ஏற்பாட்டில் நேற்று (9) யாழ் ஒஸ்மானியாக் கல்லூரி அதிபர் எம்.சேகு ராஜிது அவர்களின் தலைமையில் கல்லூரியின் மஹ்மூத் மண்டபத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர்  சாம்பசிவம் சுதர்சன் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார். 

புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த நான்கு மாணவர்களுக்கும் சர்வதேச யாழ்ப்பாணம் முஸ்லிம் சமூக அமைப்பினால் துவிச்சக்கர வண்டி மற்றும் நினைவுச் சின்னங்கள் வழங்கிவைக்கப்பட்டதுடன், பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டது. 

மேலும் இம்மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளுக்காக மேலதிக வகுப்புக்களை நடாத்திய ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டதுடன், நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட பிரதேச செயலர் அவர்களுக்கும் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார். 

குறித்த அமைப்பினால் தொடர்ச்சியாக தரம் ஐந்து மாணவர்களுக்கான மேலதிக வகுப்புக்கள் பாடசாலையில் நடாத்தப்பட்டு வருவது விசேட அம்சமாகும். 

இந்நிகழ்வில் சர்வதேச யாழ்ப்பாணம் முஸ்லிம் சமூகத்தின் சர்வதேச பிரதிநிதிகள், இலங்கைச் செயலாளர், யாழ் மாவட்ட பிரதான இணைப்பாளர்கள், பாடசாலை ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க பிரதிநிதிகள், பழைய மாணவர் சங்கப் பிரதிநிதிகள், உலமாக்கள், பெற்றோர்கள், மாணவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். 

தகவல் :- 
என்.எம். அப்துல்லாஹ் 

No comments

Powered by Blogger.