February 26, 2020

எப்படி ஏற விட்டார்கள்


டெல்லி பள்ளிவாசல் மினரா மீது ஆர்.எஸ்.எஸ் காரன் ஒருவன் ஏறிய வீடியோ பார்த்தேன்...கடும் கோபம் வந்தது, அவனைப் பார்த்து அல்ல.. எப்படி ஏற விட்டார்களென்று... நிச்சயம் தவறு நம் மீது இருக்கிறது... வஹ்ன் என்ற உலக ஆதாயத்தில் லயித்து விட்டோம்... அது தான் காரணம்... எந்த ஒரு கலவரத்திலும் பள்ளிவாசல் பக்கம் மறந்தும் கூட சங்கிகள் நுழைய விரும்பாத நிலையை உண்டாக்காத வரை கலவரங்கள் ஓயாது... உண்டாக்கிவிட்டால் கலவரங்கள் நடக்காது.

வெறும் 33,000 வீரர்களையும், இத்துப்போன பழைய தளவாடங்களையும் வைத்துக் கொண்டு இலட்சக்கணக்கான வீரர்களைக் கொண்ட பாரசிகக் பேரரசை வீழ்த்தியது கதை அல்ல... வரலாற்றில் பொறிக்கப்பட்ட சம்பவம்... உலகப் பற்றும், உயிர் வாழும் ஆசையும் நம்மைப் போலவே அன்றைய முஸ்லிம் போர்வீரர்களிடம் இருந்திருந்தால் அந்தப் போரில் முஸ்லிம் படைகள் அழித்து தரைமட்டம் ஆக்கப் பட்டிருக்கும்...

உணர்ச்சிவசப்பட்டு தற்பொழுது கொதிப்பதால் எந்த உடனடி மாற்றமும் வரப் போவது இல்லை... பொறுமை காப்போம், சிந்திப்போம்...

முதலில் 144 தடை உத்தரவு போடுவார்கள்... அதை மதித்து நாம் வீட்டின் உள்ளே இருப்போம்... அல்லது அதை மீறி வந்தால் போலீஸ் நம்மை சுட்டுக் கொல்லும்.. கேட்டால் தடையை மீறி வந்தார்கள் என்பார்கள்... நாம் விட்டிற்குள் இருந்தால் ஆர்.எஸ்.எஸ் காரர்கள் கும்பலாக பயங்கர ஆயுதங்களுடன் வருவார்கள்... போலீஸ் அவர்களை தடுக்காது, மாறாக அவர்களுக்கு உதவும்... அருகில் இருக்கும் இந்துக்கள் கலவரக்காரர்கள் அருகில் வரும் பொழுது அவர்களை கேள்வி கேட்க மாட்டார்கள்.. மாறாக காவிக் கொடியை தங்கள் வீடுகளில் ஏற்றி நாங்கள் இந்துக்கள் இதோ அருகில் இருப்பவர் தான் முஸ்லிம் அங்கே புகுந்து அடித்துக் கொல்லுங்கள் என்று சிக்னல் கொடுப்பார்கள்...

இது தான் டெம்ப்லேட்... இது தான் குஜராத்தில் நடந்தது, இது தான் முஷாபராபாத்தில் நடந்தது, இன்று டெல்லியிலும் இது தான் நடக்கிறது, நாளை அங்கும் இது தான் நடக்க இருக்கிறது, நாளை மறு நாள் இங்கும் அது தான் நடக்க இருக்கிறது, அடுத்தடுத்து வரும் காலங்களில் எங்கும் அது தான் நடக்க இருக்கிறது...

இது தான் அவர்களின் டெம்ப்லேட்...

அவர்கள் ஒரு போதும் தனியே வர மாட்டார்கள்... அரசு அமைப்பின் உதவியுடனே வருவார்கள்... அரசின் உதவி இல்லாமல் அவர்களால் உங்களை நெருங்க முடியாது என்று அவர்களுக்கும் தெரியும்...

அவர்கள் கோழைகள்... சந்தேகமே இல்லை... கூட்டமாய்த்தான் வந்தார்கள், வருகிறார்கள், இனியும் வருவார்கள்...

ஆனால் பள்ளியில் ஏற விடுகிறோமே? நாம் யார்? வீரர்களா? அதைத் தடுக்கப் போராடி உயிர் நீத்தவர்கள் எத்தனை பேர்? அந்தத் தகவல் உள்ளதா? ஒருவரோ, இருவரோ, ஐவரோ, பத்து பேரோ அல்லது 500 பேரோ... எண்ணிக்கை அல்ல பிரட்சனை.. மாறாக எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க நாம் மகிழ்ச்சி கொள்ளலாம்... பூஜ்ஜியம் இல்லாத ஒரு எண் இருந்தால் நாம் எதிர்காலத்தில் சிறப்பாய் வாழ்வோம்... அந்த இடத்தில் முஸ்லிம்கள் இறக்கவில்லை என்றால் நம் நிலை மிகவும் பரிதாபத்திற்கு உரியது... நம்மை நாம் சுய பரிசோதனை செய்ய வேண்டும்...

சரி... டெம்ப்லேட் விஷயத்திற்கு வருவோம்... இனி இப்படித்தான் நடக்கும்.. போலீஸ் காப்பார்கள் என்று வீட்டிற்குள் இருக்க முடியாது... இந்த டெம்ப்லேட்டை எப்படி எதிர் கொள்ளப் போகிறோம்? என்ன திட்டங்களை தீட்டப் போகிறோம் என்பதில் தான் நம் பிழைத்திருத்தல் இருக்கிறது...

காலம் கடந்துவிடவில்லை... கோழைகளை வீழ்த்த பெரும் முயற்சிகள் தேவை இல்லை... என்னத்தை இழந்து விட்டோம் இப்பொழுது? ஏன் இவ்வளவு விரக்தி? 100 கோடி நஷ்டம் ஆகி இருக்குமா? 100 பேர் இறந்து இருப்பார்களா? அன்றும் இறந்தார்கள், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தளபதி... தளபதி என்றால் யாரோ, எவரோ அல்ல.. முஹம்மது நபி ஸல் அவர்களின் உற்ற தோழர்கள்... எப்பேர்பட்ட இழப்பு? அதற்காக யாரும் திரும்பி வந்துவிடவில்லை.. ஒரு தளபதி வெட்டப்பட்டு இறந்ததும் அடுத்த தளபதி கொடியை கையில் ஏந்தி போரைத் தொடர்ந்தார்.. அவருக்குப் பின் அடுத்தவர்... அவருக்குப் பின் அடுத்தவர்... இறுதியில் வென்றது யார்? முஸ்லிம்கள்.. ஏன்? உயிர் பயம் இல்லாமல் போராடினார்கள்... அது தான் விஷயம்...

வஹ்னை விட்டால் போதுமானது... இது தான் உண்மை.. இது தான் சத்தியம்..

Puliangudi Seyad Ali

3 கருத்துரைகள்:

very good article May God Bless you

SUITABLE STORY, A UMMA WHO DON'T KNOW THEIR STORY, THEY NEVER MAKE STORY

பலய கதை சும்மா இருந்தா போதும் அது முன்னய கதை இப்ப இந்துக்கள் வளித்து கொண்டனா் ஜெய் சிறி ராம் இது தொடக்கம்

Post a Comment