Header Ads



நல்லதொரு முஸ்லிம் அரசியல் தலைவர் முஸம்மில் - ஜீனரத்தன தேரர்

- இக்பால் அலி -

ஆளுநர் ஏ. ஜே. எம். முஸம்மில் வடமேல் மாகாணத்தில் ஓரிரு வாரங்களில்  சிங்கள மக்களின் நல்லெண்ணத்தையும் நம்பிக்கையையும் வென்ற  நல்லதொரு முஸ்லிம் அரசியல் தலைவர் என்று  பௌத்த சமயத் தலைவர் குருநாகல்  பௌத்த விஹாரையின் விஹாராதிபதி ரக்கவ ஜீனரத்தன தேரர் புகழாரம் தெவித்தார் 

முஸ்லிம் வர்த்தக சங்கம் மற்றும் சிங்கள வர்த்தக சங்கம் இணைந்து  முஸ்லிம் வர்த்தகர்களுக்கு மத்தியில் சமகால அரசியல் தொடர்பிலான விழிப்புணர்வுக் கூட்டம் குருநாகல் புளு ஸ்கை ஹோட்டலில் வடமேல் மாகாண ஆளுநர் ஏ. ஜே. எம். முஸம்மில் தலைமையில் இடம்பெற்றது. 
இந்நிகழ்வில்  உரையாற்றிய குருநாகல் பௌத்த விஹாராதிபதி  ரக்கவ ஜீனரத்தன தேரர் இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில் 

வடமேல் மாகாண ஆளுநர் முஸம்மில் சிங்கள மக்களின் நல்லெண்ணத்தையும் நம்பிக்கையையும் வென்ற  நல்லதொரு முஸ்லிம் அரசியல் தலைவர். வடமேல் மாகாணம்  80 விகிதம் பெரும்பான்மை இன மக்கள் வாழும் பிரதேசமாகவும் நான்கு வகையிலான பௌத்த கலாசார கேந்திர புரதான முக்கியத்துவம் வாய்ந்த  பிரதேசமாகும்.  ஆனால்;  ஒரு சிறுபான்மையின முஸ்லிம் ஒருவர்  நியமித்த போது  ஆரம்பத்தில் அவர் வேண்டாம் என மறுதலித்தார்கள். அவருக்கு எதிர்ப்பலைகள் சுரொட்டிகளிலும் காணப்பட்டன.  அவர் தம் கடமைப் பொறுப்பைக் கூட ஒரு மாதம் கடந்துதான் ஏற்கின்ற சூழ்நிலை காணப்பட்டது. எனினும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இப்பிராந்தியத்தின் பிரதான அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னான்டோ முதலியவர்கள் இணைந்து சிறுபான்மை முஸ்லிம்களை கௌரவப்படுத்த வேண்டும் என்ற வகையில் வழங்கப்பட்ட ஆளுநர் பதவிக்கு  ஜே. எம். எம். முஸம்மில் அவர்களே இருக்க வேண்டும் என்ற  நியதியில் செயற்பட்டார்கள்.

அந்த வகையில் அவர் பொறுப்பை ஏற்று குறித்த ஓரிரு வாரங்களில் அவர் தம் செயற் திறனைக் காட்டி பௌத்த சமயத் தலைவர்கள் உட்பட முழு சிங்கள மக்களின் உள்ளத்தை வென்ற  ஆளுநராக தற்போது திகழ்கின்றார். எனவே அவர் இம்மாட்டத்தில்  சிங்கள முஸ்லிம் மக்களிடையே காணப்பட்ட இன முரண்பாடுகள் எல்லாவற்றையும்  இல்லாமற் செய்து இன நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் ஏற்படுத்துவதில்  முனைப்புடன் செயற்பட்டு வருகிறார். 
அது மட்டுமல்ல ஜனாதிபதி இந்நாட்டில் வாழும் அனைத்து மக்களுடைய  பாதுகாப்பை உறுதிப்படுத்துவதிலும் அவர்களுடைய எதிர்கால சுவிட்சமான நல்வாழ்வை ஏற்படுத்துவதிலும் சிறந்த அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவதிலும் முழு நோக்காக் கொண்டு செயற்படுவதாக தமது உரைகளில் அவர் தெளிவாக குறிப்பிட்டு வருகின்றார். 

ஒர் இனத்தை ஆதரிப்பதோ இன்னுமொரு இனத்துக்கு வேறுபாடுகள் காட்டுவதோ என்பது கிடையாது . சமயங்களும் எல்லாம் சமனாகும். விசேடமாக உண்மையிலேயே பொருளாதாரத்தை கட்டி எழுப்புவதற்கும் பொருளாதார நடவடிக்களை இடையூறுகளின்றி வர்த்தகர்கள் தொடரேச்சியாக  முன்நோக்கிச்  செல்ல வேணடும் என்கின்ற எண்ணக்கருவுடன்  செயற்பட்டு வருபவர் தான் எமமது நாட்டு ஜனாதிபதி கோத்பாய ராஜபக்ஷ. 

அவர் பதவிகேற்கும் போது நான் பௌத்த சமய விஹாரைகளுக்கும் பள்ளிகளுக்கும் கோவில்களுக்கும் செல்லக் கூடிதாது என்று முன்வைத்து கோரிக்கை விடுத்தேன்.  ஆனால் அவர் அவைகளுக்கப்பால் சென்று உண்மையிலேயே அவர் எல்லாயின மக்களையும் சமயங்களையும் ஒன்றிணைக்கக் கூடியவர் என்பதை ஓரிரு வாரங்களில் நிரூபித்துக் காட்டியுள்ளார் என்று அவர் மேலும் தெரிவித்தார். 

இந்நிகழ்வில் முன்னாள் வடமேல் மாகாண முதல் அமைச்சர் அதுவ விஜேசிங்க, குருநாகல் மாவட்டட ஜம்மிய்யதுல் உலமா சபையின் செயலாளர் மௌலவி ஹபீழ்  குருநாகல் மாநகர முதல்வர் துசார சன்ஜீவ , இப்பாகமுவ பிரதேச தவிசாளர் முஸ்லிம் சிங்கள வர்த்தகப் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இக்பால் அலி
12-02-2020

1 comment:

  1. நல்லவர் என்றால் சிங்கள மக்கள் வாக்களித்து MP ஆக்குங்கள் சந்தோஷம்.

    ReplyDelete

Powered by Blogger.