Header Ads



சஹ்ரானின் கும்பலை ஒழிக்க ஒத்துழைப்பு வழங்கிய, மாஹிரை பிரதமர் மஹிந்த கௌரவித்தார்


சாய்ந்தமருதில் மறைந்திருந்த சஹ்ரானின் கும்பலை ஒழிப்பதற்காக ஒத்துழைப்பு வழங்கிய சாய்ந்தமருது பிதேச செயலகத்தின் சாய்ந்தமருது - 09ம் பிரிவுக்கான (வொலிவேரியன் கிராமம் உள்ளடங்களாக) கிராம உத்தியோகத்தர்  எம்.எம்.மாஹிர் இன்று (21) வெள்ளிக்கிழமை கண்டியில் நடந்த அகில இலங்கை கிரrம உத்தியோகத்தர்கள் மாநாட்டில் அமைச்சர்கள், அரச உயரதிகாரிகள் முன்னிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ நினைவுச் சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டார்.

தனது உயிரைக் கூட பொருட்டில் கொள்ளாது சஹ்ரானின் கும்பலை ஒழிப்பதற்கு உதவிய அவருக்கு மக்களும் அரச அதிகாரிகளும் தொடர்ந்தும்  வாழ்த்துக்களை தெரிவித்து வருவதுடன் கௌரவிப்புக்களுடன்  மட்டும் நின்று விடாமல் கிராம உத்தியோகத்தர்  எம்.எம்.மாஹிர் அவர்களுக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட பொதுநிர்வாகம், உள்நாட்டலுவல்கள் அமைச்சு பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுநல அமைப்புக்கள் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.

ஏனெனில் இச்சம்பவத்துடன் தொடர்புடைய இரு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பொலிஸ் திணைக்களம் சாஜன்ட் பதவியுயர்வு வழங்கி அவர்களை கெளரவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நூருல் ஹுதா உமர். 

1 comment:

  1. You are created that sahran group,
    But now your acting it's

    ReplyDelete

Powered by Blogger.