February 25, 2020

மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி வைத்த ஜனாதிபதி கோட்டாபய

மத அடிப்படைவாதிகளுக்கு 'நல்லாட்சி அரசு' வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்ததால்,மதவழிபாட்டில் ஈடுபட்டிருந்தோர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இன்று மக்களுக்கு பாதுகாப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ

நேற்றைய நாள் இன்று சரித்திரமாகின்றது. அதனால் சரித்திரம் என்பது இறந்த காலத்தை வாசிப்பதாகும். எம்மிடமிருந்து தூரமாகிப் போகும் சரித்திரத்தை, நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் உருவாக்குவதற்கான வலுவைப் பெற வாசிக்க வேண்டியுள்ளது. கடந்த காலத்தில் கற்ற பாடங்கள் மூலமும் நிகழ்கால சவால்களுக்கு முகங்கொடுப்பதன் மூலமும் பெறும் அனுபவத்தால் மனிதன் சரித்திரத்தை உருவாக்குகின்றான்.

இவ்வாறு ஒரு முகவுரையுடன் இந்தக் கட்டுரையை ஆரம்பிக்க எண்ணியதற்குக் காரணம் புதிதாக அமைக்கப்பட்ட கட்சி மூலம் அரசியல்வாதியல்லாத, ஆனால் புகழ் பெற்ற நிர்வாகியான ஒருவர் நாட்டின் ஜனாதிபதியாகிய நுறு நாள் சரித்தரத்தை மீண்டும் ஞாபகப்படுத்திப் பார்ப்பதனாலாகும்.

2019 நவம்பர் 16ம் திகதி உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் எழுபது இலட்சத்தை அண்மித்த மக்களால் கோட்டாபய ராஜபக்ஷ இந்நாட்டின் ஏழாவது நிறைவேற்று ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார். நல்லாட்சியாளர்களால் அழிக்கப்பட்டிருந்த நாட்டை மீண்டும் சரியான பாதையில் இட்டுச் செல்லவே அவர் தெரிவு செய்யப்பட்டார். அங்கு இரண்டு எதிர்பார்ப்புகள் இருந்தன.அவற்றில் முதலாவது தேசிய பாதுகாப்பு.

நல்லாட்சியால் மதஅடிப்படைவாதிகளுக்கு வசதி பெற்றுக் கொடுக்கப்பட்டிருந்தது. அந்த வசதிகளை வைத்துக் கொண்டு மத அடிப்படைவாதிகள் தாக்குதல்களை நடத்தினர். கடவுள் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது இன்னொரு கடவுளின் பெயரால் படுகொலைத் தாக்குதல் நடந்தது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் நாட்டு மக்களிடையே ஏற்படுத்திய அதிர்ச்சி தேசிய பாதுகாப்பு குறித்த தேவையை உணர்த்தியது. அதன் பின்னர் அச்சூழ்நிலை இனத்துக்குப் பாதுகாப்பை வழங்கக் கூடிய புதிய தலைமையின் தேவையை ஏற்படுத்தியது. அதனாலேயே அனைவரினது கைகளிலும் தேசியக் கொடி வந்தது. அதனால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசுடன் ஏற்பட்ட உடன்படிக்கையின் முதலாவது நிபந்தனையான தேசிய பாதுகாப்பு நிறைவேற்றப்பட்டுள்ளதா என நாம் முதலில் ஆராய வேண்டும்.

முன்னாள் இராணுவ அதிகாரியும் பாதுகாப்புச் செயலாளருமான அவர், நாட்டின் பாதுகாப்பை சரியாக நிறைவேற்றுவார் என எதிர்க் கட்சி பிரபலஸ்தர்களும் நம்பிக்கை தெரிவித்திருந்தார்கள். இராணுவ தலைவரொருவருக்கு பாதுகாப்பு செயலாளர் பதவி அதனாலேயே வழங்கப்பட்டது. இராணுவத் தளபதி பதவியும் பொருத்தமானவருக்குக் கிடைத்தது. இனத்தின் பாதுகாப்புக்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. முப்படைகளும் பொலிஸாரும் தமது கடமைகளை சரிவர நிறைவேற்றுவதால் நல்லாட்சி அரசாங்கத்தால் பெற்றுக் கொடுக்க முடியாத தேசிய பாதுகாப்பை ஜனாதிபதி வழங்கியுள்ளார்.இது விடயத்தில் நாம் அனைவரும் மகிழ்ச்சியடையலாம்.

மக்களின் இரண்டாவது எதிர்பார்ப்பு ஊழல் மோசடி நிறைந்த ஆட்சியாளர்களின் ஆட்சிக்குப் பதிலாக சிறப்பான ஆட்சியை உருவாக்குவதாகும். மாத்திரைகள், ஊசி மருந்துகள் என்பவற்றில் ஊழல் புரிந்த, போதைப் பொருட்களால் இவைகளுக்கு மரண சாசனம் எழுதிய, ஆற்றங்கரையில் மணலை அகழ்தல், சரணாலய பகுதியில் காடுகளை அழித்தல், புண்ணியபூமி மற்றும் தொல்பொருளியல் பெறுமதி வாய்ந்த இடங்களை அழித்தல் என்பன எப்போது முடிவுக்கு வரும் என எண்ணியவர்கள் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி ஆனதால் நிம்மதிப் பெமூச்சு விட்டார்கள்.

கோட்டாபய ராஜபக்ஷவிடம் ஜனாதிபதிக் கனவு ஒருபோதும் இருக்கவில்லை. முப்பது வருட குரூர பயங்கரவாதத்தை தோல்வியுறச் செய்து நாட்டின் பாதுகாப்புச் செயலாளராக பெற்ற அனுபவமும், நகர அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவராக நிறைவேற்றிய பணியின் காரணமாக நாட்டின் நிர்வாகத்தை நடத்த அவரை விட தகுதியானவர்கள் இன்னும் இல்லை என எண்ணிய மக்களின் அழைப்பே அவரின் அரசியல் வருகைக்கு முக்கிய காரணமாக அமைந்தது. மகாநாயக்க தேரர்களின் ஆசிர்வாதமும் அவருக்குக் கிடைத்தது. அனைவரினதும் ஆசிர்வாதத்துடன் கோட்டாபய ராஜபக்ஷவின் அரசியல் பிரவேசம் நாட்டு மக்களிடையே ஒளிமயமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது நாட்டின் நிர்வாகி புத்திசாலியாக இருக்க வேண்டும் என்ற ப்லேடோவின் கருத்துக்கு புதிய அர்த்தத்தையும் வழங்கியது. கோட்டாபய ராஜபக்ஷ அரசியலில் பிரவேசித்தது ‘எலிய’ (வெளிச்சம்) நிகழ்ச்சியின் 'வியத்மக' ஊடாகவாகும். அதன் மூலம் தனது பயணம் அறிவுஜீவிகளுடனான பயணம் என்பதை தீர்மானித்தார். அறிஞர்களிடையே பிரபலய்மான ‘எலிய’ ‘வியத்மக’ மூலம் வழங்கிய செய்தி உள்ளூரில் மாத்திரமல்ல வெளிநாடுகளிலும் ஊடகங்களினூடாக பரவி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டின் தலைமைக்கு தகுதியானவர் எனப் பறைசாற்றின. அதன் பலனாக அத் தலைமைக்கு இன்று நூறு நாட்கள் பூர்த்தியடைந்துள்ளன.

தற்போது மக்களின் கருத்து அவரது பயணத்துக்கு உதவக் கூடிய அறிவுஜீவிகளை பாராளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டும் என்பதாகும். கல்வியையும், புத்தியையும் மாத்திரம் அளவுகோலாகக் கொள்ளாது நாட்டை நேசிக்கும், மதத்தை மதிக்கும், மக்களை கசக்கிப் பிழியாத, தனக்கென பெற்றுக் கொள்ளாத, மக்களுக்கு வழங்கும் திட்டங்களுடைய உண்மையானவர்களை தெரிவு செய்ய மக்களுக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும்.

தற்போதுள்ள அரசியலமைப்பு மற்றும் 19வது அரசியலமைப்புத் திருத்தம் காரணமாக இந்த 100 நாட்களில் சிறப்பாக எதனையும் அமைச்சரவையினால் செய்ய முடியாமல் போயுள்ளது. நூறு நாட்களுக்குள் இவற்றையெல்லாம் செய்வோம் எனக் கூறி அரசாங்கம் வேலைகளைத் தொடங்கவில்லை. நல்லாட்சி கால நூறு நாட்களை விட தற்போதைய அமைச்சரவையின் நூறு நாட்கள் மிக முன்னேற்றகரமாக அமைந்திருப்பது தெளிவாகத் தெரிவதோடு, எதிர்கால நடவடிக்கைகளை வெற்றிகரமாக்க நாம் செய்ய வெண்டியதெல்லாம் பலமான பாராளுமன்றத்துக்கு தேவையான வாக்குகளைப் பெற்றுக் கொடுப்பதாகும். அது எமது கடமையாகும்.

ஆர்.ஏ.டபிள்யூ.ரணசிங்க
(பேராதனை பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞான கற்கைகள் பிரிவின் பேராசிரியர், கண்டி கல்விமான்கள் மற்றும் தொழில்வல்லுநர்களின் சங்க ஆலோசகர்) 

0 கருத்துரைகள்:

Post a Comment