February 17, 2020

முஸம்மிலின் ஏற்பாட்டில், உலமாக்களுக்கான அரசியல் விழிப்புணர்வு கூட்டம்


- இக்பால் அலி -

72 வது சுதந்திர தினத்தில் ஜனாதிபதி  ஆற்றிய உரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. தான் ஜனாதிபதியாவதற்கு வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல இந்நாட்டில் வாழும் அனைத்து இன மக்களுக்கும்  ஜனாதிபதி தானே எனவும் சகல இன மக்களும் தங்களுடைய சமயங்களைச் சுந்;திரமாகப் பின்பற்றுவதற்கு முடியும் எனவும் அதேவேளையில் முஸ்லிம்  மக்களை தவறாக வழி நடத்தியவர்கள் முஸ்லிம் அரசியல் கட்சி தலைவர்கள் தான் எனவும் வடமேல் மாகாண ஆளுநர் ஏ. ஜே. எம். முஸம்மில் தெரிவித்தார்.

வடமேல் மாகாண ஆளுநர் ஏ. ஜே. எம். முஸம்மில் அவர்களின்  அனுசரணையுடன்  குருநாகல் மாவட்ட ஜம்மிய்யதுல் உலமா சபையின் ஏற்பாட்டில் உலமாக்களுக்கான சமகால அரசியல் தொடர்பான விழிப்புணர்வூட்டும் கூட்டம்  சியம்பலாகஸ்கொட்டுவ ரிச்வின்  மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட வடமேல் மாகாண ஆளுநர் ஏ. ஜே. எம். முஸம்மில் இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில் 

கடந்த 72 வது சுதந்திர தின நிகழ்வில் ஜனாதிபதி உரையாற்றும் போது இந்நாட்டில் எனக்கு வாக்களித் எனக்கு வாக்களிக்காத எல்லாயின மக்களுடைய ஒரு தலைவன் என்று தெரிவித்தார். நான் யாருக்கும் எந்தவொரு இனத்துக்கும் வேறுபாடுகள் செய்யக் கூடியவனல்ல. இந்நாட்டில் வாழக் கூடிய எல்லா மக்களும் அவர்கள் பின்பற்றக் கூடிய சமயத்தைப் பின்பற்றக் கூடிய அங்கீகாரம் இருக்கிறது. அதைச் சுந்திரமாக செயற்படுத்த முடியும் என்று உறுதியாகத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று அவர் தெரிவித்தார். ஆனால் அவரைப் பற்றி ஜனாதிபதித் தேர்தலின் போது கோத்பாய ராஜபக்ஷ  வெற்றிபெற்றால் இந்த நாடு ஒரு மியன்மாராக மாறும். வெள்ளை வேன்கள் வரும். முஸ்லிம்களின் பள்ளிவாசல்களை தாக்குவார்கள். எமது சமயத்தைப் பின்பற்றுவதற்கு மிகவும் நெருக்கடியைக் கொடுப்பார்கள் என முஸ்லிம் என்ற பெயரைச் சூட்டியுள்ள முஸ்லிம் கட்சிகளின் அரசியல் தலைவர்கள்  தேர்தல் மேடைகளில் பேசினார்கள். இது உண்மையிலேயே முஸ்லிம்களை பிழையான முறையில் வழி நடத்தியுள்ளார்கள்.

ஆனால் கோத்தபாய ராஜபக்ஷ அவர்கள் வடமேல் மாகாணத்துக்கு  முஸ்லிம்  ஒருவரையே ஆளுநராக நியமித்துள்ளார். அவர் ஆளுநரை நியமித்தமை தொடர்பில் மிகவும் ஆழமான முக்கிய காரணங்கள் உள்ளன. சிங்கள முஸ்லிம் மக்கள் இம்மாவட்டத்தில் ஒன்று சேர்ந்து வாழ வேண்டும். நாங்கள் சமய ரீதியில் பிரிந்து வாழக் கூடாது. முஸ்லிம் சிங்கள மக்களுக்கிடையே காணப்படும் சந்தேகத்தை இல்லாமற் செய்ய வேண்டும் என்ற நோக்கின் அடிப்படையிலேயே என்னை இங்கு அவர் ஆளுநராக நியமித்தார். 

குருநாகல் மாவட்டத்தில் முஸ்லிம்களை வழிநடத்தக் கூடிய ஒரு அரசியல் தலைமைத்துவம் தேவை என்ற நிலைப்பாட்டில் ஜனாதிபதி, பிரதமர், ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியவர்களுடைய எதிர்பார்ப்புகள் உள்ளன. 40 வருடங்களாக அரசியல் செய்துள்ளேன். ஐக்கிய தேசிய கட்சியிலேயே கூடுதலான  அரசியலைச்  செய்தேன். அதில் அதிகாரங்களைப் பெற்று சேவையும் செய்துள்ளேன். மலேசியாவில் உயர்ஸ்தானிகராக இருந்தேன். இது போன்ற தகைமைகளைப் பெற்ற நான் இதன் மூலம் பணம் சம்பாதிப்பதற்கோ என்னுடைய குடும்பத்தின் வயிற்றுப் பசியைப் போக்குவதே என்னுடைய நோக்கமல்ல. என்னுடைய கடமைகளெலாம் முடிந்து விட்டது.

நாங்கள் அரசாங்கத்துடன் இணைந்து செல்ல வேண்டும் என்பது  எங்களுக்கு அவசியமாக இருக்கிறது. இன்று அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் பொதுத் தேர்தல் இடம்பெறவுள்ளது. தற்போது ஐக்கிய தேசிய கட்சிக் காரர்கள் சண்டை பிடிக்கிறார்கள். ஐக்கிய தேசிய கட்சி இல்லை. 

குருநாகல் மாவட்ட முஸ்லிம்களைப் பொறுத்தவiரையிலும் ஒரு ஆனாதைச் சமுதாயமாக உள்ளனர். கல்வி, காணி பொருளாதாரம் என்ற வகையில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளனர். இதற்கான காரணம் இம்மாவட்டத்திலுள்ள மக்கள் ஆளும் கட்சியுடன் இணைந்து செல்வதில்லை. கிடைக்கக் கூடிய வளங்களைப் பெற்றுக் கொள்வதில்லை. இந்தப் பிரதேச மக்களின் விடிவுக்காகவும் உரிமைக்காகவும்  தியாகத்துடன் செயற்பட வேண்டிய அரசியல் தலைமைத்துவம் அவசியம். 

இன்று வெறும் சொப்பிங்க பேக்குடன் வருகை தந்தவர்கள் கோடிஸ்வரர்களாக இருக்கிறார்கள். கொழும்பில் பெரும் வியாபாரத்தைச் செய்தா அவர்கள் பணத்தைச் சேகரித்தார்கள். இல்லை அவர்கள் அரசியல் செய்தார்கள். நான் அரசியல் செய்தது  தேடியதை இல்லாமற் செய்து கொண்டு அரசியல் செய்கின்றேன்.

நாங்கள் பெரும்பான்மையின மக்களுடன் இணைந்த வாழ வேண்டும். அவர்களை நிராகரித்து வாழ முடியாது. நாம் இம்முறை ஐக்கிய தேசியக் கட்சியை ஆதரித்து எநதவொரு பிரயோசனமுமில்லை. என்னை விட எந்தவொரு ஐக்கிய தேசியக் கட்சிக் காரனும் இருக்க முடியாது. 

இந்நிகழ்வில் கொழம்பகம ரஜமஹா விஹாராதிபதி, குருநாகல் மாவட்ட ஜம்மிய்யதுல் உலமா சபையின் தலைவர் மௌலவி சுஐப் தீனி பின் நூரி, செயலாளர் மௌலவி, மௌலவி சித்தீக், முன்னாள் வடமேல் மாகாண அமைச்சர் குனதாச தெஹிகம, மாவத்தகம பிரதேச சபையின் எதிர் கட்சித் தலைவர் முஹமட ரிபாழ் முதலிய பிரமுகர்கள் பெரு எண்ணிக்கையிலான மௌலவிமார்கள் கலந்து கொண்டனர்.


2 கருத்துரைகள்:

மோட மௌலவிகள் மாத்திரம் இவனுடைய சூழ்ச்சி வலையில் மாட்டுவார்கள். இவனுக்கு மேயர் பதவி வழங்கும் போது பெறப்பட்ட வாக்குறுதி குருநாகலின் எல்லா முஸ்லிம் வாக்குகளையும் பொஹட்டுவக்கு வழங்கவைக்க வேண்டும் என்பதுதான். அந்த வாக்குறுதிக்கு வக்காளத்து வாங்க அவன் முஸ்லிம்களைப்பலிக்கடாவாக்க அலைந்து திரிகின்றான். மௌலவிக்கூட்டங்களே, நாட்டைச்சூறையாடும் கள்வர்களுக்கும் ஊழல்காரர்களுக்கும் உங்களுடைய பெறுமதிமிக்க வாக்குகளை வழங்காது மிகவும் சிந்தித்து இந்த நாட்டில் முஸ்லிம்களின் நிலைப்பாட்டுக்கு உதவாவிட்டாலும் உபத்திரவமும் அநியாயமும் செய்யதாக கட்சிகளை மிக நுணுக்கமாகத் தெரிவு செய்து அவர்களுக்கு வாக்களியுங்கள்.

இது அரசியல் விழிப்புணர்வு அல்ல பொஹட்டுவ கட்சியின் விழிப்புணர்வு கூட்டம். மக்களை ஏமாற்றும் அரசியல் விழிப்புணர்வு.

Post a Comment