Header Ads



குவைத் வாழ் இலங்கையர்களுக்கிடையிலான, கிரிக்கட் சுற்றுப் போட்டி


குவைத் வாழ் அனைத்து இலங்கையர்களையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து அவர்களுக்கிடையில் இன ஐக்கியத்தையும் , நல்லுறவினையும் வலுப்படுத்துமுகமாகவும், மேலும் எதிர்வரும் இலங்கையின் 72 ஆவது  சுதந்திர தினத்தினை முன்னிட்டும்  The Society of All Sri Lankans in Kuwait (SLK) அமைப்பு கடந்த ஜனவரி 31ம் திகதி வெள்ளி அன்று அர்தியா பிரதேசத்தில் ஒரு கிரிக்கட் சுற்றுப்  போட்டி ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தது. 

இந்தப் போட்டியில் குவைத்தில் வசிக்கும் 120 க்கு மேற்பட்ட  இளைஞர்கள்  இன மத வேறுபாடுகளின்றி கலந்து கொண்டிருந்தனர்.

இப்போட்டியில் முதலாம் இரண்டாம் இடங்களை முறையே Blue Falcons ,  Mawanella Zahira OBA -Kuwait  அணியினர் பெற்றுக்கொண்டனர்.

மேலும் இவ்வாறானதொரு கரப்பந்தாட்ட போட்டி ஒன்றும் கடந்த 10ம் திகதி வெற்றிகரமாக முடிவுற்றது குறிப்பிடத்தக்கது.

இவற்றிற்கான வெற்றிப்பதக்கங்கள் மற்றும் பரிசில்கள்களை வரும் பெப்ரவரி மாதம், 7ம் திகதி நாட்டின் சுதந்திர தினத்தினை நினைவு கூறு முகமாக  SLK யினால் பிரத்தியேகமாக  ஏற்பாடு செய்யப்பட இருக்கும் நிகழ்ச்சியில் வழங்கப்படும்.

இப்போட்டியில் கலந்து கொண்ட , ஆதரவளித்த, சமூகமளித்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் SLK தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றது.

தகவல்:   ஜெசீம் -பொது செயலாளர்

            The Society of All Sri Lankans in Kuwait (SLK)

No comments

Powered by Blogger.