Header Ads



ரஞ்சனுக்கு ஆதரவாக மங்கள, தேர்தலில் ஐ.தே.மு. யின் கீழ் நிறுத்த வேண்டுமாம்

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க செயற்பட்ட விதம் பற்றிய ஒழுங்கம் சார்ந்த பாரதூரமான விமர்சனம் தன்னிடம் இருந்தாலும் அவரது வெளிக்கொண்டு வந்துள்ள சமூக யதார்த்தத்தை எவரும் புறந்தள்ள முடியாது என முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

மாத்தறையில் நேற்று நடைபெற்ற சந்திப்பொன்றில் அவர் இதனை கூறியுள்ளார். இந்த சந்திப்பில் கலந்து கொண்ட யுவதி ஒருவர், ரஞ்சன் ராமநாயக்கவின் குரல் பதிவுகள் சம்பந்தமாகவும் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள மங்கள சமரவீர, நாடாளுமன்றத்தில் ரஞ்சனுடன் எடுத்து கொண்ட செல்ஃ.பி தொடர்பாக கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்துள்ள மங்கள,

“ உண்மையில் ராவய பத்திரிகையின் ஆசிரியர் விக்டர் ஐவன் கூறுவது போல், தெரிந்தோ தெரியாமலோ ரஞ்சன் வரலாற்று சிறப்புமிக்க பணியை செய்துள்ளார்.

இந்த சமூகம் மிகவும் சீரழிந்து போயுள்ளது. முற்றாக அழுகி போயுள்ளது. இதன் துர்நாற்றத்தை ரஞ்சன் பதிவு செய்த தொலைபேசி உரையாடல்கள் வழியாக இலங்கை மக்கள் புரிந்துக்கொள்ள முடியுமாக இருந்தால், ரஞ்சன் செய்திருக்கும் காரியம் வரலாற்று சிறப்புமிக்கது என கூறியிருந்தார்.

இது உண்மை. சமூகத்தில் காணப்படும் யதார்த்த நிலைமை ரஞ்சின் குரல் பதிவுகள் மூலம் வெளியில் தெரியவந்துள்ளது.

இவற்றை நாங்கள் மறைக்க வேண்டிய தேவையில்லை. அரசியல்வாதிகள் என்ற வகையில் நாங்கள் இவற்றுக்கு பொறுப்புக் கூற வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை கட்சியில் இருந்து நீக்கிய தீர்மானத்தை இரத்துச் செய்து அவரை எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் கீழ் நிறுத்த வேண்டும் என்பது தனது தனிப்பட்ட நிலைப்பாடு எனவும் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.