Header Ads



இலங்கையில் புர்காவை தடை செய்யுமாறு பரிந்துரை

அடையாளத்தை உறுதி செய்ய முடியாத வகையில் முகத்தை மறைக்கும் புர்கா உட்பட அனைத்து முக கவசங்களையும் தடை செய்யுமாறு தேசிய பாதுகாப்பு தொடர்பான மேற்பார்வைக் குழு பரிந்துரை செய்துள்ளது.

குறித்த குழு நேற்று விசேட அறிக்கை ஒன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.

தற்போது பல நாடுகளில் புர்கா தடை செய்யப்பட்டுள்ளதாகவும், 2019ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 5ஆம் திகதி முதல் சிரியாவிலும் புர்கா தடை செய்யப்பட்டுள்ளது.

3 வருடங்களுக்குள் மதரஸா நிறுவனங்களில் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களும் கல்வி அமைச்சின் கீழ் உள்ள கல்வி முறைக்கு கொண்டுவர வேண்டும் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் மீண்டும் மீண்டும் அவ்வாறான நிலைமை ஏற்படுவதனை தடுப்பதற்கு இந்த நடவடிக்கை எடுக்குமாறு குறிப்பிட்டுள்ளது.

4 comments:

  1. ungada label Ali Sabri, Fais musutafa irukkum pothu intha saddathukku enna thaamatham

    ReplyDelete
  2. இண்னும் வறும்.

    ReplyDelete
  3. HAKEEM, RISHAD,RANIL ARASHAANGAM CABINETTUKKU KONDUVANDA BURKA SHATTAM ITHU.

    ReplyDelete
  4. உலகின் சகல நாடுகளிலும் முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சினைகள், அவரகளை அடக்கி ஒடுக்கும் விதமாகத்தான் சென்று கொண்டிருக்கின்றன. தற்போது இலங்கையும் அதற்குள் படிப்படியாக மாறிக்கொண்டு வருகின்றது. மாட்டிக் கொண்டு எப்படித்தான் கல்விஅறிவில் மேம்பட்டவரகளாக இருந்தாலும்; மிக உயர்ந்த வகுப்பினுள் வருபவரகளாக இருந்தாலும் பதவி என்று வருகின்றபோது சிந்தனைச் சறுக்கல் ஏற்படுவது இயல்புதான்.

    ReplyDelete

Powered by Blogger.