Header Ads



முஸாதிஹாவுக்கு ஐந்து இலட்சம் ரூபா நிதி வழங்கும் நிகழ்வு

ஹஸ்பர் ஏ ஹலீம்_

அன்மையில் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் விஞ்ஞானப்பிரிவில் மாவட்ட ரீதியில் முதலாம் இடத்தை பெற்ற சேகு முஹம்மது மீராசா பாத்திமா  முஸாதிக்கா என்ற மாணவிக்கு ஐந்து இலட்சம் வழங்கும் நிகழ்வு இன்று மாலை (05) மூதூர் சாபி நகர் பகுதியில் உள்ள தி/மூ/இமாம் ஷாபி வித்தியாலய மண்டபத்தில்  இடம்பெற்றது.

திருகோணமலை மாவட்ட பல நோக்கு கூட்டுறவு சங்கங்கள், மற்றும் கூட்டுறவு திணைக்களமும் இணைந்து இத்தொகையினை மீராசா  பாத்திமா முஸாதிக்காவின் பல்கலைக்கழக கல்விக்காக அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

அத்தோடு மூதூர் வலயக் கல்வி பணிப்பாளர் ஏ.எல்.எம்.காஸிம்   அவர்களினால் ரூபா  10000/= பெறுமதியான காசோலையும் முஸாதிக்காவிற்கு கையளிக்கப்பட்டது.

குறித்த மாணவி முஸாதிகா கல்வி கற்ற திருகோணமலை சாஹிரா கல்லூரியின் அதிபர்அலி சப்ரி , ஆசிரியைகள் இதன் போது பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்கள்.

இந்நிகழ்வு கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் எம்.சீ.ஷெரிப் அவர்களின் தலைமையில் இடம்பெற்றதோடு இந்திகழ்வில் கூட்டுறவு மாகாண அமைச்சின் செயலாளர் அவர்களும் திருகோணமலை மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர், , கூட்டுறவு சங்கங்களின் தலைவர்கள், திருகோணமலை சாஹிரா கல்லூரி  அதிபர் அலி சப்ரி , கூட்டுறவு உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

3 comments:

  1. If God AllMighty Allah decides/wishes/blesses, he will give in many way to the deserving, Alhamdulillah, Insha Allah.
    What one has to do is pray and ask "DUA", Insha Allah.
    Noor Nizam - Convener "The Muslim Voice".

    ReplyDelete
  2. நல்ல விடயம் சம்பந்தப்பட்டவர்களுக்கு அல்லாஹ் வுடைய அருள்கிடைக்கட்டும்.ஆனால் வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியாமல் இருப்பதுசிறப்பு என்ற இஸ்லாமிய கோட்பாடு பின்பற்றப்பட்டடிருந்தால் சிறப்பாக இருக்கும்.

    ReplyDelete
  3. உதவும் நல்ல உள்ளங்களும் சாதனை மாணவி முசாதிக்காவுக்கும் என் அன்பு நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Powered by Blogger.