Header Ads



எமது பிரார்த்தனைகளை ஏற்றுக்கொண்டு, அல்லாஹ் நல்லதொரு தலைவரை நாட்டுக்குத் தந்திருக்கிறான், ரிஸ்வி முப்தி

அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உல­மாவின் தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி, கொள்­ளுப்­பிட்டி ஜும்ஆ பள்­ளி­வா­சலில் கடந்த 14.02.2020 வெள்­ளிக்­கி­ழமை ஆற்­றிய குத்பா பிர­சங்­கத்தின் முக்­கிய பகு­தி­களை இங்கு தரு­கிறோம்.

நாம் இந்த நாட்­டு­டைய 72 ஆவது சுதந்­திர தினத்தை கொண்­டாடிக் கொண்­டி­ருக்­கிறோம். இந் நாட்டு பிர­ஜைகள் நாம். இந்த நாட்டில் வாழ்ந்து இந்த நாட்டு மண்ணில் மர­ணிக்­கக்­கூ­டி­ய­வர்கள் நாம். மதீ­னத்தில் மௌத்­தாக வேண்டும் என்று எங்­க­ளு­டைய உள்­ளத்தில் நிய்யத் இருக்­கலாம். அல்­லாஹ்­வு­டைய பாதையில் மரணம் வேண்டும் என்று பிரார்த்­தனை செய்­யலாம். ஆனால் நாம் இந்த நாட்டை நேசிக்கக் கூடி­ய­வர்கள். அத­னால்தான் இலங்­கை­யு­டைய ஜனா­தி­ப­திக்கு நாம் ஒரு முக்­கி­ய­மான செய்­தியை தெரி­வித்தோம்.

இலங்­கையில் 72 ஆவது சுதந்­திர தினத்தை முன்­னிட்டு நீங்கள் (ஜனா­தி­பதி) ஆற்­றிய உரைக்கு அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா நன்­றி­களை தெரி­வித்துக் கொள்­கி­றது. அந்த உரை வர­லாற்று முக்­கி­யத்­துவம் வாய்ந்த ஓர் உரை­யாக அமைந்­தி­ருந்­த­துடன் இந்­நாட்டு மக்­களின் உரி­மை­களை இன மத பேத­மின்றி பெற்­றுக்­கொ­டுக்கும் வகையில் அமைந்­தி­ருந்­தது. இந்­நாட்டு மக்­க­ளது சுதந்­தி­ரத்­தையும் ஜன­நா­யக பாது­காப்­பையும் உறு­திப்­ப­டுத்தக் கூடிய தூர நோக்கு கொண்ட ஒரு தலை­வரை பெற்­றி­ருப்­ப­தை­யிட்டு நாம் மகிழ்ச்­சி­ய­டை­கிறோம். எவ்­வித இன, மத பேத­மின்றி அனைத்து மக்­க­ளி­னதும் ஜனா­தி­ப­தி­யாக செயல்­ப­டு­வ­தாக நீங்கள் உங்கள் உரையில் குறிப்­பிட்­டதை பாராட்­டு­கிறோம். மேலும் உங்கள் தேசத்தைக் கட்­டி­யெ­ழுப்பும் பய­ணத்தில் முஸ்லிம் சமூகம் தனது அனைத்­து­வித பங்­க­ளிப்­பையும் வழங்­கு­வ­தற்கு தயா­ராக இருக்­கின்­றது. இலங்­கை­யி­லுள்ள அனைத்து பிர­ஜை­க­ளி­னதும் உரி­மை­க­ளையும் சுதந்­தி­ரங்­க­ளையும் பாது­காத்து நடப்­பீர்கள் என்ற நம்­பிக்கை எமக்­கி­ருக்­கி­றது.

உங்­க­ளது பணியை நல்ல முறையில் செய்து நாட்டை அபி­வி­ருத்­தி­ய­டையச் செய்­வ­தற்கும் உங்கள் ஆரோக்­கி­யத்­திற்கும் நீண்ட ஆயு­ளுக்கும் நாம் பிரார்த்­திக்­கிறோம் என்ற ஒரு முக்­கி­ய­மான செய்­தியை அ.இ.ஜ. உலமா முன்­வைக்­கி­றது.

இந்த 72 ஆவது சுதந்­திர தினத்தில் ஜனா­தி­பதி ஆற்­றிய உரை தொடர்பில் எம்­மீது ஒரு கடமை இருக்­கி­றது என்ற அடிப்­ப­டையில் இந்­நாட்டு மக்கள் சார்­பா­கவும் இந்­நாட்டு முஸ்­லிம்கள் சார்­பா­கவும் அவர் ஆற்­றிய உரை பொன்­னெ­ழுத்­துக்­களால் எழு­தப்­பட வேண்டும் என்­பதில் மாற்று கருத்து கிடை­யாது.

நாம் இந்த நாட்டில் மிகக் காத்­தி­ர­மாக வாழ்ந்­த­வர்கள். நாம் 72 வருடம் சுதந்­தி­ரத்­திற்கு பின் மட்டும் வாழ்ந்­த­வர்கள் அல்ல. நாம் 1300 வரு­டங்­க­ளுக்கு மேல் வாழ்ந்­த­வர்கள். அரே­பி­யர்கள் இந்த நாட்­டிற்கு புதி­தல்ல. அரபு மொழி 2500 வரு­டங்­க­ளுக்கு மேல் இந்த நாட்டில் புழக்­கத்தில் உள்­ளது. நாம் இதை படிக்­க­வில்லை. நாம் இதை அறி­மு­கப்­ப­டுத்­த­வில்லை. நாம் சரி­யாக எடுத்து செயற்­ப­டுத்­த­வில்லை என்­பது  தான் இதி­லி­ருக்­கின்ற குறை­பாடு. நாம் இதை கற்­பிக்க வேண்டும். மக்­க­ளுக்கு அறி­மு­கப்­ப­டுத்த வேண்டும். அர­பிகள் இந்த நாட்­டிற்கு வந்து, 2000 வரு­டங்­க­ளுக்கு முதல் அனு­ரா­தபுர பகு­தி­களில் வாழ்ந்­தி­ருக்­கி­றார்கள் என்­பது வர­லாற்றில் பதி­யப்­பட்­டி­ருக்கும் ஓர் உண்மை. அத்­தோடு 1300 வரு­டங்­க­ளாக முஸ்­லிம்கள் இந்த நாட்­டுடன் தொடர்­பு­பட்­டுள்­ளார்கள் என்­பது நபி­ய­வர்­க­ளு­டைய காலம் தொட்டு அதற்கு பிறகு ஹஸ்ரத் உம­ரு­டைய காலம் தொட்டு பல வர­லாற்று பதி­வுகள் இங்கு பதி­யப்­பட்­டி­ருக்­கி­ன்றன.

அதனால் நாம் இந்த நாட்டை நேசிக்கக் கூடி­ய­வர்கள். இதை ­வெ­ளிப்­ப­டுத்­து­வது எங்­க­ளு­டைய கடமை. நாம் இந்த நாட்­டுக்கு ஒரு நாளும் எந்த வகை­யிலும் அநி­யா­யமோ துரோ­கமோ செய்­த­வர்கள் அல்ல என்­பதில் முஸ்­லிம்கள் என்­றுமே உறு­தி­யாக இருக்­கிறோம்.

21 ஏப்ரல் 2019 எமக்கு தலை­கு­னிவைத் தந்த நாளாக அமைந்­தி­ருந்­தது. அதை செய்­தது நாங்கள் அல்ல. அதை சில வழி­கே­டர்கள், இஸ்லாம் என்ற பெயரில் அதற்கு விலை போயி­ருக்­கி­றார்கள் என்­பதை இதற்கு முன்­பி­ருந்த ஜனா­தி­ப­தியும் பலரும் மிகத் தெளி­வாக வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றார்கள். அதனால், இந்த கால­கட்­டத்தில் குர்­ஆ­னையும் ஹதீ­ஸையும் இஸ்­லா­மிய அடிப்­ப­டை­க­ளையும் மிகத் தவ­றாக வழி­ந­டத்தும் ஒரு கும்பல் உலகில் தோன்­றி­யி­ருக்­கி­றது. இதை முறி­ய­டிப்­பது எங்­க­ளு­டைய பாரிய பொறுப்­பாக இருக்­கி­றது.

நாம் எல்­லோரும் ஒன்­று­பட்டு முஸ்­லிம்கள் மட்­டு­மல்ல இந்த நாட்டில் வாழக்­கூ­டிய எல்லா மக்­களும் ஒன்­று­பட்டு இந்த ஜனா­தி­ப­திக்­காக பிரார்த்­தனை செய்தோம். அல்­லாஹ்­வி­டத்தில் மன்­றா­டினோம். குனூத்­துகள் ஓதினோம். யா அல்லாஹ் நல்­லொ­தொரு தலை­வரைத் தா என்று கேட்டோம். அல்லாஹ் தந்­தி­ருக்­கிறான். அதற்கு நன்­றி­யு­டை­ய­வர்­க­ளாக துஆப் பிரார்த்­த­னை­களில் ஈடு­பட வேண்டும். அடுத்த மார்ச் 2 ஆம் திகதி ஜனா­தி­பதி இந்த பாரா­ளு­மன்­றத்தைக் கலைத்து விடக்­கூடும்.

பாரா­ளு­மன்­றத்தைக் கலைத்த பின்னர் ஏப்ரல் மாதம் 25 இல் தேர்தல் நடக்­கலாம். அது எங்­க­ளு­டைய நாட்டில் முதல் நோன்­பாக அல்­லது இரண்­டா­வது நோன்­பாக இருக்­கலாம். அந்த நேரத்தில் தேர்தல் வரு­வ­தற்­கு­ரிய வாய்ப்­புக்கள் இருக்­கி­றது. அதனால் முஸ்­லிம்கள் இப்­போ­தி­ருந்தே அல்­லாஹ்­வி­டத்தில் மன்­றாடி துஆச் செய்ய வேண்டும். வெறு­மனே, துஆ­வுடன் மட்டும் நிற்­காது மேலும் சில நகர்­வு­க­ளையும் செய்­வது மிக அவ­சி­ய­மாகும். அதில் சில­வற்றை இங்கு உங்­க­ளுக்கு என்­னு­டைய அபிப்­பி­ரா­ய­மாக சொல்ல விரும்­பு­கிறேன்.

இலங்­கை­யி­லுள்ள அனைத்து முஸ்­லிம்­களும் தவ­றாமல் வாக்­க­ளிக்க வேண்டும். வரக்­கூ­டிய தேர்­தலில் வாக்­க­ளிக்க இப்­போதே தயா­ராக வேண்டும். இலங்­கையில் 1.5 மில்­லியன் முஸ்­லிம்­க­ளு­டைய வாக்­குகள் இருக்­கின்­றன. அதில் 12 இலட்சம் வாக்­கு­களை நாங்கள் அளிப்போம்.

2004 டிசம்பர் 26 இல் சுனா­மியின் போது 37000 மனி­தர்கள் உயி­ரி­ழந்த போது 30 ஆம் திகதி இதே மிம்­பரில் நான் பேசி­யதை மறந்­தி­ருக்­க­மாட்­டீர்கள். 2006 இல் மூதூரில் ஏற்­பட்ட பிரச்­சி­னையைத் தொடர்ந்தும் 1989 இல் மன்­னா­ரி­லி­ருந்தும் யாழ்ப்­பா­ணத்­தி­லி­ருந்தும் மக்கள் விரட்­டப்­பட்ட நேரத்­திலும் இதே மிம்­பரில் நாம் பேசி­யி­ருக்­கிறோம். அதே­போன்­றுதான் இப்­போதும் சொல்­கிறேன். இந்த விட­யத்தை நான் ஒரு அமா­னி­த­மாக முன்­வைக்­கிறேன். நான் இன்­று ­மௌத்­தா­கலாம்.. ஆனால் இந்த நாட்டு முஸ்­லிம்­க­ளுக்கு சொல்ல வேண்­டி­யதை சொன்­னீரா என்று அல்லாஹ் என்­னி­டத்தில் கேட்டால் ஆம் நான் சொல்­லி­விட்டு வந்­தி­ருக்­கிறேன் என்று சொல்­வ­தற்­காக நான் இதனை ஓர் அமா­னி­த­மாக எடுக்­கிறேன்.

தாம் விரும்­பி­ய­வர்­க­ளுக்கு வாக்­க­ளிப்­பது ஒவ்­வொ­ரு­வ­ரதும் உரிமை. தெரிவு. யாருக்கு வாக்­க­ளிக்க வேண்டும் என்று என்னால் சொல்ல முடி­யாது. ஆனால் நாம் ஒரு வேளை தவ­றாக வழி­ந­டத்­தப்­ப­டு­கி­றோமா என்­ப­தையும் சிந்­திக்க கட­மைப்­பட்­டி­ருக்­கிறோம்.

இந்த நாட்டு மக்கள் பாகிஸ்­தானை விடவும் படிப்­ப­றிவில் கூடி­ய­வர்கள். இந்த நாட்­டி­னு­டைய கல்விப் புள்­ளி­வி­ப­ரங்­களை எடுத்து நோக்­கினால் அல்­ஹம்­து­லில்லாஹ், முஸ்­லிம்­களும் மற்­ற­வர்­களும் அல்­லாஹ்­வு­டைய அரு­ளினால் நல்ல அறி­வுள்­ள­வர்­க­ளாக இருக்­கி­றார்கள். உலகக் கல்­வி­யையும் அல்லாஹ் தந்­தி­ருக்­கிறான் . மார்க்கக் கல்­வி­யையும் தந்­தி­ருக்­கிறான். உல­மாக்­க­ளையும் தந்­தி­ருக்­கிறான். தொழி­லா­ளி­க­ளையும் தந்­தி­ருக்­கிறான். புத்­தி­ஜீ­வி­க­ளையும் தந்­தி­ருக்­கிறான். நல் மக்­க­ளையும் தந்­தி­ருக்­கிறான்.

இலங்கை வாழ் முஸ்­லிம்கள் அர­சியல் தொடர்­பான தங்­க­ளது பாரம்­ப­ரிய முறையை மாற்­றி­ய­மைத்தல் வேண்டும். பாரம்­ப­ரி­ய­மாக இப்­ப­டித்தான் செய்து வந்தோம் என்­பது அல்ல. காலத்தின் தேவை என்ன என்­பதை ஒவ்­வொரு ஊரும் ஒவ்­வொரு ஊரி­லுள்ள உல­மாக்­களும் ஒவ்­வொரு ஊரி­லுள்ள முக்­கி­யஸ்­தர்­களும் ஒவ்­வொரு ஊரி­லுள்ள பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் சிந்­திக்க வேண்டும். இப்­பொ­ழுது பாரா­ளு­மன்­றி­லுள்ள 20 முஸ்லிம் உறுப்­பி­னர்­க­ளி­டமும் நான் மிகப்­ப­ணி­வாக முஸ்­லிம்கள் சார்­பாக உல­மாக்கள் சார்­பாக வேண்டிக் கொள்­கிறேன். ஒற்­று­மை­யா­குங்கள். விட்டுக் கொடுங்கள். தூர நோக்­குடன் நடந்து கொள்­ளுங்கள். கால சூழல் என்ன? உல­கத்­து­டைய சூழல் என்ன? என்­பதை மிக அவ­தா­ன­மாக பாருங்கள். விட்டுக் கொடுங்கள். எனக்கு இப்­ப­தவி வேண்டாம் என்று சொல்­லுங்கள். அல்லாஹ் உங்­களை உயர்த்­துவான். இந்த இடத்­திற்கு வேறொ­ருவர் தான் வர வேண்டும் என்றால் அவரை நீங்கள் நிய­மி­யுங்கள்.

முஸ்­லிம்கள் சிதறி வாழும் பிர­தே­சங்­களில் அங்­குள்ள பெரும்­பான்மை சமூ­கங்­க­ளுடன் இணைந்து தேசிய கட்­சி­களை ஆத­ரிக்க வேண்டும் என்ற நிலைப்­பாட்டை நாம் எடுத்­தாக வேண்டும். முஸ்­லிம்கள் செறிந்து வாழும் பகு­தி­க­ளிலும் முஸ்­லிம்கள் சிறு­பான்­மை­யாக வாழக் கூடிய பகு­தி­க­ளிலும் முஸ்­லிம்கள் எப்­படி நடந்து கொள்ள வேண்டும் என்­ப­தற்­கான வழி­காட்­டல்கள் வழங்­கப்­பட வேண்டும்.

80% பௌத்­தர்கள் இருக்­கக்­கூ­டிய இந்த நாட்டில் நாங்க 10% முஸ்­லிம்கள் வாழ்­கிறோம். அல்­ஹம்­து­லில்லாஹ். நல்ல சுதந்­தி­ரத்தைப் பெற்­றி­ருக்­கிறோம்.

ஆனால் நாங்கள் சற்றுத் தூர­மாக இருக்­கிறோம். அந்த தூர­மான இடை­வெ­ளியை நிரப்­புவோம். அதற்கு அர­சியல் ரீதி­யாக என்ன செய்ய வேண்டும் என சிந்­திக்க வேண்டும். சில வேளை­களில் களுத்­து­றைக்கு உள்­ள­தல்ல கொழுப்­புக்கு, கொழும்­புக்கு உள்­ள­தல்ல கண்­டிக்கு, கண்­டிக்கு உள்­ள­தல்ல மட்­டக்­க­ளப்­புக்கு . மட்­டக்­க­ளப்­புக்கு உள்­ள­தல்ல திரு­கோ­ண­ம­லைக்கு .. திரு­கோ­ண­ம­லைக்கு உள்­ள­தல்ல குரு­நா­க­லுக்கு… ஒவ்­வொரு மாவட்­டத்­திலும் வித்­தி­யா­ச­மான நிலைப்­பா­டு­களை எடுக்க வேண்டி இருக்கும் என்­ப­தையும் எல்­லோரும் கவ­னத்தில் கொள்ள வேண்டும்.

பாரா­ளு­மன்ற தேர்தல் தொடர்பில் மாவட்ட பிர­தேச (உலமா சபை) கிளைகள் தத்­த­மது பகு­தி­களில் தேவை­யான பொருத்­த­மான பயன்­மிக்க வழி­காட்­டல்­களை அப்­ப­குதி வாழ் முஸ்­லிம்­க­ளுக்கு வழங்க வேண்டும் என்­ப­தையும் நான் உங்­க­ளுக்கு சொல்லிக் கொள்ள விரும்­பு­கிறேன்.

கடந்த 2010 இலி­ருந்து நாம் சில சோத­னை­களை அனு­ப­வித்துக் கொண்­டி­ருக்­கிறோம். இதை முறி­ய­டிப்­ப­தற்கு என்ன செய்ய வேண்டும் என்ற ஒரு கட்­டத்தில் பலதை விட்டுக் கொடுத்­தி­ருக்­கிறோம். நாங்கள் ஒரு பெரும்­பான்மை சமூ­கத்­தோடு வாழும்­போது சில சில விட­யங்­களை மார்க்கம் அனு­ம­தித்த சில விட­யங்­களை விட்டுக் கொடுக்க வேண்டும். அந்த விட்டுக் கொடுப்பு எதற்­காக? பெரி­ய­தொரு  விட­யத்தை அடைந்து கொள்­வ­தற்­காக.

அடுத்­த­தாக, உல­கத்­து­டைய பூகோள அர­சியல் பற்றி கவனம் செலுத்த வேண்டும். இஸ்­லா­மோ­போ­பியா (இஸ்லாம் பற்­றிய பயம்) தான் அத­னு­டைய சந்­தைப்­ப­டுத்தல் உற்­பத்தி. அதில் நானும் நீங்­களும் தான் இரை­யா­கிறோம். இந்த நாட்டு பெரும்­பான்மை மக்கள் நல்ல மக்கள். எல்லா பகு­தி­க­ளிலும் ஒரு சிலர் சில சில குறை­பா­டுகள் செய்யக் கூடி­ய­வர்கள் இருக்­கி­றார்கள், அதனை சகித்துக் கொண்டு துஆ­வோடு பணி­வோடு அஹ்­லாக்­குடன் நாம் வாழ வேண்டும்.

உல­மாக்கள், வியா­பா­ரிகள் எல்­லோரும் ஒன்று சேர்ந்து இந்த நாட்டு அர­சியல் தலை­வர்­க­ளுடன் சேர்ந்து நாட்­டு­டைய அர­சியல் எதிர்­காலம் எப்­ப­டி­யி­ருக்க வேண்டும் என்­பதை  தீர்­மா­னிக்கும் நேரம் வந்து விட்­டது என்­பதை நான் இங்கு உறு­திப்­ப­டுத்த விரும்­பு­கிறேன்.

இந்த அர­சி­யலில் ஈடு­பட்­டி­ருக்கக் கூடி­ய­வர்­க­ளுக்கு அல்லாஹ் கூலியை கொடுக்க வேண்டும். அவர்­களும் தாராளத் தன்­மை­க­ளோடு நடந்து கொள்ள வேண்டும். இந்த முஸ்­லிம்­களை ஒரு நாளும் தவ­றான வழியில் யாரும் பயன்­ப­டுத்­த­வி­டாமல் தூர நோக்­கோடு நடத்த வேண்டும்.

எப்­படி ஜம்­இய்­யதுல் உலமா 2009 இல் இந்­நாட்­டு­டைய அமைப்­புக்­களை ஒன்­று­ப­டுத்தி ஒற்­றுமைப் பிர­க­ட­னத்­திற்குக் கொண்டு வந்து இந்த நாட்­டு­டைய எல்லா அமைப்­புக்­க­ளையும் அவை தரீக்­காக்­­க­ளாக இருக்­கலாம், ஜமா­அத்­தாக இருக்­கலாம் ஒன்­று­பட்­டி­ருக்க வழி செய்­தி­ருக்­கிறோம்.

அர­சியல் தலை­வர்­களே! முதி­ய­வர்­களே ! அனு­ப­வ­சா­லி­களே! உங்­களை அழைக்­கிறேன். அல்­லாஹ்­வுக்­காக வாருங்கள். மாறுங்கள். தூர நோக்­கோடு செயல்­ப­டுங்கள். காலத்தின் தேவையைப் புரிந்து கொள்­ளுங்கள். இஸ்லாம் வழி­காட்ட வந்த அடிப்­ப­டை­களை ஏற்று நடந்து கொள்­ளுங்கள். அல்லாஹ் நிச்­ச­ய­மாக அமோக வெற்­றியை தொடர வைப்பான்.

இன்­னு­மொரு விட­யத்தைச் சுட்­டிக்­காட்ட விரும்­பு­கிறேன். 9.9.2019  இல் நடந்த ஒரு சோகத்தை சொல்லி முடித்துக் கொள்ள விரும்­பு­கிறேன். 9.9.2019 இல் ஒரு வர்த்­த­மானி அறி­வித்தல் வந்திருக்கிறது. அதில் 70 இலங்கை முஸ்லிம்களை சர்வதேச தீவிரவாதிகளாக பதிவு செய்திருக்கிறார்கள். எங்களுக்கு 21.04.2019 எப்படி மிக சோகமான நாளோ அதேபோல இந்த 70 பேரை தீவிரவாதிகளாக வர்த்தமானியில் அறிவித்தமையும் பாரதூரமானதாகும்.

இந்த நிலைமை நீடிக்கக் கூடாது. இதற்கு நாங்கள் இடமளிக்கக் கூடாது. தனது மகன் இவ்வாறான கொள்கைகளில் இருக்கிறார் என்றால் அவரை திருத்துவது வழிகாட்டுவது விளங்கவைப்பது தந்தையின் கடமையாகும்.

அதற்கு முடியாவிட்டால் எனது மகன் என்னைச் சார்ந்தவனல்ல என்று நூஹ் (அலை) சொன்னதைப் போன்று நாமும் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம். அப்போதுதான் இந்த நாட்டுடைய கடமைப்பாட்டை சரிவர செய்தவர்களாக நாம் மாற முடியும்.

ஜனநாயக நாட்டில் பல உரிமைகளுடன் வாழ்ந்திருக்கிறோம். இது தொடர வேண்டும். அல்லாஹுத்தஆலா இதை நலவாக்கி பூர்த்தியாக்கி வைத்து இந்தநாட்டுடைய விடயத்தில் அல்லாஹ் கிருபை செய்வானாக! இந்த நாட்டில் அமைச்சர்களாக பதவியேற்றவர்கள் மற்றும் இந்த நாட்டுடைய பாராளுமன்றில் இருக்கக் கூடிய அனைவருக்கும் மற்றும் மரணித்தவர்கள் உயிர் வாழக் கூடியவர்களுக்கும் துஆ செய்கிறோம். அல்லாஹ் ஒற்றுமையுடன் இந்நாட்டு பெரும்பான்மை சமூகத் தின் நிலைமைகளை புரிந்து செயற் படக்கூடியவர்களாக எங்களை ஆக்குவானாக.-Vidivelli

9 comments:

  1. இந்த நாட்டில் வாழும் பெரும்பான்மையர்களின் பாடசாலைகளில் பிரிவேனாக்களில், பாலர் பாடசாலைகளில் இனத்துவேசம் பிள்ளைகளுக்கு ஊட்டப்படுகின்றது.முஸ்லிம் சிறுவர்களுடன் பழகவேண்டாம் அவர்கள் தரும் எவற்றையும் சாப்பிட வேண்டாம் என மட்டுமல்ல அவர்களின் வரலாறு பற்றி பயங்கர நச்சுக்கள் பெரும்பான்மை சிறுவர்களிடையே பரவலாகத் தூவப்படுகின்றது. இதன் விளைவு இன்னும் எதிர்காலத்தில் மிகவும் பயங்கரமான விளைவுகளை மட்டுமல்ல பயங்கர அழிவையும் ஏற்படுத்தும்.அதற்கு என்ன பதிலீடிகளை மேற்கொள்ளலாம், அவற்றை அகற்ற என்ன ஆக்கபூர்வமான செயற்திட்டங்களைச் செயற்படுத்தலாம் அவற்றை என்ன ரீதியில் அந்த சமூகத்தை அணுக முடியும் போன்ற ஆக்கபூர்வமான சிந்தனைகளும் செயற்திட்டங்களும் மாத்திரம் எமது எதிர்கால பரம்பரையை இந்த நாட்டில் வாழுவதற்கு அடித்தளத்தை அமைக்க முடியும்.அது தவிர பள்ளிவாயல்களில் நடைபெறும் குத்பாக்கள் கேட்டுவிட்டு வௌியில் வரமுன்பு மறந்து போகும் சோனக கலாசாரத்தில் இன்னும் எந்த மாற்றமும் தென்படவில்லை.

    ReplyDelete
  2. excellent, Allah may bless muslim ummah.

    ReplyDelete
  3. இனவாத மதவாத கட்சிகள் அழிந்து போக குநூத் ஓதினால் நல்லம் தானே! முஸ்லிம்கள் நிம்மதியடைவார்கள்

    ReplyDelete
  4. முகஸ்துதி இஸ்லாத்தில் ஹறாம். இப்படியே மைத்திரி வந்தபோதும் கவிபாடியிருப்பீர்கள், அடுத்த ஜனாதிபதியாக இன்னுமொருவர் வர ப் போகும் போதும் இப்படி ஒரு கவியே பாடப்போகிறீர்கள். ஏனெனில் உங்களுக்கு என்று ஒரு தனித்துவம் சொந்த அறிவு திறன் என்ரைக்குமில்லை.
    அங்கே ஒரு பள்ளி பெளத்த விகாரையாக மாறியுள்ளது, முடிந்தால் அதனை மீட்டெடுத்து காட்டுங்கள்.

    ஜப்னாமுஸ்லிம் இந்த காமென்டை பாரபட்சமின்றி பிரசுரிக்கவும் வேண்டும்.

    ReplyDelete
  5. Antha Raagama mosque pakkamum conjam ungal talayai tiruppungo
    !!!!!!!

    ReplyDelete
  6. மைத்ரீ ஆட்சிலும் இதைத்தானே முல்லா சொன்னிக்கோ ! முதலில் ACJU வில் தனிமனித தலைதைத்துவ ஆதிக்கம் இல்லாமல் போக இறைவனை பிராத்திப்போமாக !ஆமேன்!!

    ReplyDelete
  7. தனிப்பட்ட அபிப்பிராயமாக தற்போதைய நிலையமையில் முஸ்லிம்களின் மீதுள்ள வெறுப்பினைத் தணிக்குமுகமாக தனக்கும் உடன்பாடில்லாத விடயத்தினை சமூக பாதுகாப்பு கருதி தலைவர் பேசியிருக்கலாம். ஆனால் அதற்கு மிம்பரைப் பாவித்திருக்காமல் தவித்திருக்கலாம். அதேபோல் அல்லாஹ்வைச் சுட்டி அழைப்பு விடுத்திருப்பது முஸ்லிம்களுக்கு சங்ங்ங்க்கடத்தை ஏற்படுத்தியிருக்குமே.

    ReplyDelete
  8. நம்பிக்கை கொண்டவர்களே!

    அல்லாஹ்வுக்கும் கட்டுப்படுங்கள்.

    இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கட்டுப்படுங்கள்.

    உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பிள் லி அதை அல்லாஹ்விடமும் (அவன்) தூதரிடமும் ஒப்படைத்து விடுங்கள்.

    இதுதான் (உங்களுக்கு) மிகவும் சிறப்பான அழகான முடிவாக இருக்கும்.

    (அல்குர்ஆன் 4 : 59)
    www.tamililquran.com

    ReplyDelete

Powered by Blogger.