Header Ads



களுத்துறை முஸ்லிம்கள் மனது வைத்தால் என்னை பாராளுமன்றம் அனுப்பலாம், மகிந்த பச்சைக்கொடி காட்டிவிட்டார்

- அன்ஸிர் -

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில், களுத்துறை மாவட்டத்தில் போட்டியிடுமாறு பிரதமர் மகிந்த ராஜபக்ஸ என்னிடம் கூறிவிட்டார். எனவே களுத்துறை மாவட்ட முஸ்லிம்கள் மனது வைத்தால், தன்னை பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைக்கமுடியுமென மர்ஜான் ஹாஜியார் தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

களுத்துறை மாவட்டத்தில், சிங்கள சமூகத்திடம் எனக்கு குறிப்பிடத்தக்க வாக்குகள் உள்ளன. நான் பாராளுமன்றம் செல்வதற்கு அந்த வாக்குகள் மாத்திரம் போதாது.

முஸ்லிம்களுடைய வாக்குகளும் கிடைத்தால்தான் என்னால் பாராளுமன்றம் செல்ல முடியும். இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டுமென களுத்துறை மாவட்ட முஸ்லிம்கள் ஆர்வமும் அக்கறையும் கொண்டிருந்தால் நிச்சயம் என்னை பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைப்பார்கள்.

பொதுஜன ஐக்கிய முன்னணியின் தலைவர் பிரதமர் மகிந்த ராஜபக்ஸ,  என்னிடம் களுத்துறை மாவட்டத்தில் போட்டியிடுமாறு கூறினார். நான் சம்மதம் தெரிவித்தேன். எனக்காக பிரச்சாரம் செய்வதாகவும் பிரதமர் மகிந்த உறுதியளித்தார்.

நானும் எனது தந்தையும் பேருவளைத் தொகுதிக்காக இம்மாவட்டத்தில் வாழும் முஸ்லிம்களுக்காக பல சேவைகளை ஆற்றியுள்ளோம். அந்தவைகயில் முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை அதிகரித்துக்கொள்ள தற்போது அரியதோர் வாய்ப்புக் கிட்டியுள்ளது எனவும் மர்ஜான் ஹாஜியார் மேலும் குறிப்பிட்டார்.

3 comments:

  1. NAL WAALTHUKKAL.INSHAA ALLAH
    VISHESHAMAAHA,MUSLIMGAL
    MUNNIRU SHEYATPATTAAL UNGAL
    VETRI NICHAYAM.

    ReplyDelete
  2. Marjan Faleel is s good choice as a new Muslim candidate for Kalutara District to represent the Muslims of Beruwela, Aluthagama/Dhara Town and Kalutara as the SLPP/SLFP Alliance candidate in the next general elections in April this year, Insha Allah. The choice made by PM Mahinda Rajapaksa is a well thought one and all Muslims/Muslim Vote Bank in Kalutara should unanimously decide to vote for him and send him to parliament, Insha Allah. His father, Marhoom M.S.M. Faleel Hajiar a SLFP and Madam Sirimavo Bandaranaike LOYALIST, during his time as the Chief SLFP organizer for Beruwala, former member of the Western Provincial Council and former Beruwala Urban Council Chairman, did yoeman service to the Sinhalese and the Muslims in the district, not only as a politician, but also as a generous philanthropist. I knew him personally and had the opportunity to visit him at his Colombo residence many a time, sometimes along with Dr. Maharoof who was then SLFP District Organizer for Harispattuwa and Vice President of the SLFP and I was the SLFP District Organizer - Trincomalee District. Marhoom Faleel Hajiar was a close friend of ours and his sons, including Marjan respected their father's friends and were very humble to us.
    As an up and coming Muslim politician, he will be able to move forward to go to parliament and continue the work of his late father as an MP of the SLPP/SLFP Alliance which his father could not achieve/was not blessed, Insha Allah. The Muslim Vote Bank in Kalutara District should "UNITEDLY VOTE" him to be elected as an Member of Parliament in April 2020, Alhamdulillah, Insha Allah. HE. Gotabaya Rajapaksa's political vision is that young and new political aspirants from the Muslim community should come forward to enter parliament and create a new political culture in the communities of the minorities, who can be honest and bring together the Muslim Vote Bank and gather them to create a "New Muslim Political Culture". A culture that will create a political force which will be honest and sincere and produce "CLEAN"and diligent Muslim Politicians to stand up and defend the Muslim Community politically and otherwise along with the new government with a 2/3 majority, especially from among the Muslim Youth. WITH MARJAN FALEEL, HE GOTABAYA RAJAPAKSA CAN MAKE THAT HAPPEN, INSHA ALLAH. WITH CANDIDATES LIKE MUZAMMIL, GETTING THE MUSLIM VOTE BANK TO BRING IN THE 2/3 MAJORITY IN PARLIAMENT MAY NOT HAPPEN, Insha Allah.
    Noor Nizam - Peace and Political Activist, Political Communication Researcher, SLFP/SLPP Stalwart and Convener - "The Muslim Voice".

    ReplyDelete

Powered by Blogger.