Header Ads



இணையங்களில் கசியும் பெண்களின் அந்தரங்கங்கள்! இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை

சமூக வலைத்தளங்கள் ஊடாக புகைப்படங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம் என பொலிஸார் இலங்கை மக்களை எச்சரித்துள்ளனர்.

சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் போது அடையாளம் தெரியாத நபர்களிடம் குறுந்தகவல் ஊடாக தொடர்பு ஏற்படுத்தி, தங்களுடைய புகைப்படங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம் என பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

குறுந்தகவல் ஊடாக தொடர்பு கொள்ளும் மோசடியாளர்கள், நபர்களின் புகைப்படங்கள் பெறும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவ்வாறு பெற்றுக் கொள்ளும் புகைப்படங்களை நிர்வாண புகைப்படங்களுடன் இணைந்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு இணையத்தளங்களுக்கு விற்பனை செய்வதாக விசாரணை மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான மோசடியாளர்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் அவ்வாறான நபர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் அறிந்தால் உடனடியாக பொலிஸாரிடம் அறிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

1 comment:

  1. Taking photo for official need like ID, Passport and so on are allowed by scholars of Islam,

    BUT Most of them advice taking for other than official needs not acceptable.

    ReplyDelete

Powered by Blogger.