Header Ads



மார்ச் முதல் வாரத்தில், பாராளுமன்றம் கலைக்கப்படும் - பஷில் ராஜபக்ஷ

(இராஜதுரை ஹஷான்)

மார்ச் மாதம் முதலாம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்பட்டு, பலமான அரசாங்கம் தோற்று விக்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார். 

தனிப்பட்ட  வெளிநாட்டு பயணத்தை நிறைவு  செய்து இன்று -03- நாடு திருப்பியதன்  பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மார்ச் மாதம் முதல்  வாரத்தில்  பாராளுமன்றம் கலைக்கப்படும்  என்று ஜனாதிபதியும், பிரதமரும் தெரிவித்துள்ளார்கள்.  மக்களுக்கு சேவையாற்ற வேண்டுமாயின் நிலையான   பாராளுமன்றம் தோற்றுவிக்கப்பட வேண்டும். மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடனான அரசாங்கத்தை  ஸ்தாபிப்பதே    தற்போதைய பிரதான  எதிர்பார்ப்பாக  காணப்படுகின்றது.

பொதுத்தேர்தலுக்கான கூட்டணி குறித்து  எவ்வித தீர்மானங்களையும் இதுவரையில் எடுக்கவில்லை.  ஸ்ரீ  லங்கா  சுதந்திர  கட்சியினரும், பொதுஜன பெரமுனவினரும் வெற்றிப் பெறும்   சின்னத்திலே  போட்டிப் பெறுவார்கள் என்றும் அவர் கூறினார்.

No comments

Powered by Blogger.