Header Ads



மாகாணசபை தேர்தல்கள் திருத்தம் நாளை சமர்ப்பிப்பு, சிறிய கட்சிகளுக்கு பாதிப்பு

நாடாளுமன்ற தேர்தலின் பின்னர் உடனடியாகவே மாகாண சபை தேர்தல்களை நடத்துவதற்காக மாகாணசபை தேர்தல்கள் திருத்தம் நாளை 26 நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நீதியமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இதன் அடிப்படையில் பொதுத்தேர்தல் முடிவடைந்து இரண்டு மாதங்களுக்குள் மாகாணசபை தேர்தல்கள் நடத்தப்படும்.

9 மாகாணசபைகளும் ஆயுட்காலம் முடிடைந்து தற்போது ஆளுநர் ஆட்சியின் கீழ் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.

இதன்போது மக்கள் சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே தேர்தல்களை நடத்துவதே சிறந்த தீர்வாகும்.

இதற்காக புதிய கலப்பு வாக்களிப்பு முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதன்படி 50 வீதமான பிரதிநிதிகள் சாதாரண பெரும்பான்மை முறையிலும் 50 வீதமானோர் மாவட்ட மட்ட விகிதாசார முறையிலும் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

எனினும் இந்த முறைக்கு சிறிய கட்சிகள் தமது எதிர்ப்பை வெளியிட்டு வந்துள்ளன.

இந்த நிலையில் அனைத்துக்கட்சி தலைவர்களையும் அழைத்து இதற்கான தீர்வுக்காணப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. MOTHTHATHIL MAAHAANA SHAPAIKAL
    MUTRAAKA OLIKKAPPADAVENDUM.

    ReplyDelete

Powered by Blogger.