Header Ads



யாழ் ஒஸ்மானியா கல்லூரியின், புதிய பெற்றோர்சங்க நிர்வாகிகள் தெரிவு

யாழ் ஒஸ்மானியாக் கல்லூரியின் பெற்றோர் சங்கத்திற்கான புதிய நிர்வாக உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான பொதுக்கூட்டம் கல்லூரி அதிபர் ஜனாப் சேகு ராஜிது அவர்களின் தலைமையில் இன்று (16) நடைபெற்றது. 

இந் நிகழ்வில் முதலாவதாக அதிபரின் தலைமை உரை இடம்பெற்றது. அவர் தன் உரையில் சங்கத்தின் செயற்பாடுகள், பாடசாலையின் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள், பாடசாலையின் தற்போதைய நிலை, கல்விச் செயற்பாடுகள் தொடர்பில் தனது விளக்கத்தை முன்வைத்தார். அதனைத் தொடர்ந்து கடந்த முன்னைய பெற்றோர் சங்கத்தின் பொதுக் கூட்ட அறிக்கை செயலாளரால் வாசிக்கப்பட்டு சபையினால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அடுத்து பொருளாளரினால் 2019 ஆம் ஆண்டுக்கான கணக்கறிக்கை வாசிக்கப்பட்டு அதுவும் சபையினால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து சபையோர் கருத்துரைகள் இடம்பெற்றது. இறுதியாக புதிய நிர்வாகத் தெரிவு இடம்பெற்றது. 

புதிய நிர்வாகத் தெரிவின் பிரகாரம் தற்போதைய உறுப்பினர்கள் விபரம் 

தலைவர் :- அதிபர் ஜனாப் எம். சேகுராஜிது 
செயலாளர் :- எஸ்.எம். றியாஸ் 
பொருளாளர் :- என்.எம். றிஸ்வி (ஆசிரியர்) 
உப செயலாளர் :- எம்.கே.எம். ஜவ்ஸி
உறுப்பினர்கள் 
1. ஜே.எம்.றில்வான் ஹசன்
2. ஐ. ஜிப்ரி
3. எம். றிஸ்லின்
4. எஸ்.எம். நாஸர்
5. எம்.எம்.எம். றமீஸ்
6. ஏ.ஏ. ஆஸாத்
7. எம்.ஆர். நௌசாத்
8. எச்.சுவைஸ்
9. எம்.எம்.எம். நிபாஹிர் 
10. எம்.என். சியானா 
11. ஐ.எல். நிம்ரூஸ் 
ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். 

யாழ் ஒஸ்மானியாக் கல்லூரி வரலாற்றில் முதல் தடவையாக பாடசாலை பெற்றோர் சங்க நிர்வாக் தெரிவில் கலந்து கொண்ட பெருந்தொகையான பெண்களின் (பெண் பெற்றோர்கள்) கோரிக்கைக்கு அமைவாக நீண்ட கலந்துரையாடலுக்கு பின்னர் பெண் ஒருவர் முதற்தடவையாக உறுப்பினராக உள்வாங்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும். எதிர்காலத்தில் இத் தொகை அதிகரிக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்துகின்றேன். 

புதிதாக தெரிவாகியுள்ள நிர்வாகத்திற்கு பழைய மாணவர் சங்க செயலாளர் என்ற வகையில் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொளள்வதுடன், தங்களின் பாடசாலை சார் செயற்பாடுகள் திறம்பட அமைய இறைவனைப் பிரார்த்தித்து நிறைவு செய்கின்றேன். 

என்.எம். அப்துல்லாஹ் 
செயலாளர் 
பழைய மாணவர் சங்கம் 
யாழ் ஒஸ்மானியாக் கல்லூரி 

No comments

Powered by Blogger.