Header Ads



முஸ்லிம் பெண்கள் கோத்தபாயவின் அரசாங்கத்தைப் பலப்படுத்தி, குருநாகலில் முஸ்லிம் பிரநிதித்துவத்தைப் பெற வேண்டு

-இக்பால் அலி-

குருநாகல் மாவட்ட முஸ்லிம் அரசியல் தலைமைத்துவத்தை முஸ்லிம் பெண்களால் மட்டுமே பெற்றுக் கொள்ள முடியும்.  முஸ்லிம் பெண்கள் ஒன்றுபட்டு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவின் தலைமையிலான அரசாங்கத்தைப் பலப்படுத்துவதன் மூலம் நிச்சயமாக ஒரு முஸ்லிம் பாராளுமன்றப் பிரநிதித்துவத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்று வடமேல் மாகாண ஆளுநரின் பாரியார் பெரோஸா முஸம்மில் தெரிவித்தார்.

வடமேல் மாகாண ஆளுநர் ஏ. ஜே. எம். முஸம்மில் அவர்களின் காந்த சவிய பெண்கள் அமைப்பின் புதிய கிளை அங்குரார்ப்பண வைபவம் குருநாகல் கதிரவலான பிரதேசத்தில் இடம்பெற்றது அந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட வடமேல் மாகாண ஆளுநர் ஏ. ஜே. எம். முஸம்மிலின் பாரியார் பெரோஸா முஸம்மில் இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில் 

குருநாகல் மாவட்ட பாராளுமன்ற முஸ்லிம் பிரதி  நிதித்துவம்  என்பது  முஸ்லிம்களுடைய உரிமை மட்டுமல்ல  அது தம் சமூகத்தின் அடையாளத்தையும்  சுயகௌரத்தையும் ஏற்படுத்தக் கூடியவை.  எனினும் குருநாகல் மாவட்ட முஸ்லிம் பெண்கள் எந்நாளும் போல் தோல்வியைத் தழுவும் ஐக்கிய தேசிய கட்சிக்கு இம்முறையும் வாக்களித்தால் நாம் தெரிந்து கொண்டு  வாக்குரிமையை வீணாகப் பிரயோகித்த செயற்பாட்டுக்கு பலியானவர்களாகிவிடுவோம். இம் மாவட்டத்தில் நாங்கள் நீண்ட காலமாக அரசியல் அனாதையாக காணப்படுகின்றோம்.

இதன் காரணமாக இன்று குருநாகல் மாவட்டத்தில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதிகளில் எந்தவிதமான அபிவிருத்திகளையும் கண்டு கொள்ள முடியாத நிலை காணப்படுகிறது. அதிகளவிலான மாகாண சபைக்கு உட்பட்ட பாடசாலைகள்  பௌதீக வளங்கள், ஆசிரியர் பற்றைக்கு குறைகள் எனப் பல தரப்பட்ட பிரச்சினைகளுடன் உள்ளன. கிராமங்களில் உட்கட்டமைப்பு வசதிகள் கூட இன்னும் சீராக காணப்பட வில்லை. இப்படி குறைகளைப் பட்டியல் போட்டுக் காட்டலாம்.

பெரும்பான்மையின சிங்கள மக்களுடன் முஸ்லிம்கள் நீண்ட காலமாக ஒற்றுமையைப் பேணி வாழ்ந்து வரும் மாவட்டம் இது. இந்த ஒற்றுமையை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தான் எமது நாட்டு ஜனாதிபதி, பிரதமர் ஆகிய இருவரும் சேர்ந்து ஒரு முஸ்லிம் ஆளுநரை வழங்கியிருக்கிறார்கள். அது மட்டுமல்ல இம்மாவட்டத்தில் ஒரு முஸ்லிம் பாராளுமன்றப் பிரநிதித்துவம் இல்லையென உணர்ந்து அவரையே இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக களமிறக்குவதற்குத் தீர்மானித்துள்ளார்கள்.  

அவர் ஆளுநராக நியமிக்கப்பட்டு  குறுகிய காலம் என்றாலும் சிங்கள முஸ்லிம் தமிழ், கிறிஸ்தவ ஆகிய மக்கள் மனங்களில் உயர்ந்த இடத்தைப் பிடித்து விட்டார். 

எனவே எமது இம்மாவட்டத்தில் 118000 முஸ்லிம் வாக்குகள் உள்ளன. எனினும் இதிலும் 52 விகிதமான வாக்குகள் பெண்களுடையதாகும். குறிப்பாக கட்சிகளின் நிறங்களைப் பார்க்காது, கட்சியை மார்க்கம் என்று கொள்ளாமல் ,ஆளும் தரப்பின் பலத்தைப் பலப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் முஸ்லிம் பெண்கள் தங்களுடைய வாக்குகளைச் சிந்தித்துப் பயன்படுத்த வேண்டும்.

எமது வாக்குகளை தேர்தல் பிரச்சார யுக்திகள் மூலம் உங்களைக் குழப்பியடித்து வாக்குகளை சிதறிப்பதற்காக வியூகம் வகுத்து செயற்படும் கூட்டத்துடன் சிக்கிக் கொள்ளாமல் நிதானமாக சிந்தித்து குருநாகல் மாவட்ட பாராளுமன்றப் பிரநிநித்துவத்தை இல்லாமற்  செய்த துரோகிகளாக மாறாமல் பெண்களாகிய நீங்கள் உங்கள் வாக்கைப் பயன்படுத்த வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

5 comments:

  1. With much due respect to the Madam and an able Muslim lady in the Muslim community, "The Muslim Voice" cannot understand why Muzammil is engaging his wife to campaign the ladies of Kurunegala to gather votes for him at the next general elections declared in April 2020. During the Provincial Council Elections in 2014, when his wife was refused a ticket by the UNP, he crossed swords with the UNP, but his wife entertained people any day, during lunch time, media people, gossip mongers, people who want to be somebody when they are no bodies, gather at lunch time at Muzzamil’s Kollupitiya residence. On Fridays, Buriyani is served for them. But she failed in her attempts to be given an opportunity to hold public office. She is trying to do the same in Kurunegala while her husband is trying to contest the general elections on the SLPP/SLFP Alliance ticket an become an MP. Now Muzzamil’s guests would increase in Kurunegala because most will want to find out what is going on. We are not sure whether this will succeed, but HE. Gotabaya Rajapaksa's political vision is that young and new political aspirants from the Muslim community should come forward to enter parliament and create a new political culture in the communities of the minorities, who can be honest and bring together the Muslim Vote Bank and gather them to create a "New Muslim Political Culture". A culture that will create a political force which will be honest and sincere and produce "CLEAN"and diligent Muslim Politicians to stand up and defend the Muslim Community politically and otherwise along with the new government with a 2/3 majority, especially from among the Muslim Youth. WITH CANDIDATES LIKE MUZAMMIL, GETTING THE MUSLIM VOTE BANK TO BRING IN THE 2/3 MAJORITY IN PARLIAMENT MAY NOT HAPPEN. This is the "REALITY" that one should understand, Insha Allah.
    Noor Nizam - Peace and Political Activist, Political Communication Researcher, SLFP/SLPP Stalwart and Convener - "The Muslim Voice".

    ReplyDelete
  2. පළමුවෙන්ම, ඇය මුස්ලිම්වරියක්ද යන්න තහවුරු කර ගැනීමට ඇයට ඉඩ දෙන්න. බැච් ඉස්ලාමය නරක් කරයි.

    ReplyDelete
  3. This muzammil is a deal master and knows nothing except his passion.he is making all this for his personal gain and people on kurunagela should defeat him as people in Colombo defeated this lady in CMC elections.let him retire in a casino.we don't need these old hooligan scraps to decide us.

    ReplyDelete
  4. ஹே ஹே, வந்துட்டா மெடம். சும்மா போய் கொப்பி பென்சில் குடுக்கிற வேலையை மட்டும் பாருங்க உம்மா!

    ReplyDelete
  5. This is where all political parties fail. They are not ready to nominate new faces, young and educated people to the parliament.

    ReplyDelete

Powered by Blogger.