Header Ads



சஜித்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்காக, நாடு முழுவதும் கருத்தரங்கு

ஐக்கிய தேசியக் கட்சி பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் உருவாக்கப்படும் எதிர்க்கட்சியின் புதிய கூட்டணியின் தேசிய அமைப்பாளராக முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க நியமிக்கப்பட உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பிக்க ரணவக்க ஜாதிக ஹெல உறுமயவில் இருந்து விலகி ஐக்கிய தேசியக் கட்சியில் இணைய போவதாகவும் தெரியவருகிறது.

புதிய அமைப்பின் பொதுச் செயலாளராக ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான முன்னாள் அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டாரவை நியமிப்பது என அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு கடந்த 5 ஆம் திகதி தீர்மானித்திருந்தனர்.

சஜித் பிரேமதாச இது தொடர்பான யோசனையை எதிர்வரும் 10 ஆம் திகதி நடைபெறும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் சமர்ப்பித்து அனுமதியை பெற்ற பின்னர் உடனடியாக புதிய கூட்டணியை புதிய கட்சியாக பதிவு செய்ய தீர்மானித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இதனிடையே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்காக நாடு முழுவதும் விவாதங்களுடன் கூடிய கருத்தரங்குகளை ஒழுங்கு செய்ய சம்பிக்க ரணவக்க ஏற்கனவே திட்டமிட்டுள்ளார்.

முதலாவது கருத்தரங்கு எதிர்வரும் 9 ஆம் திகதி பிற்கல் 2.45 மணிக்கு தலவத்துகொடையில் உள்ள கிராண்ட் மோனாச் ஹோட்டலில் நடைபெறவுள்ளது.

2 comments:

  1. பாராளுமன்றத் தேர்தலின் முடிவுகள் தயாராக இருப்பதாகவும் பொஹொட்டுவ பெரும்பான்மையை அனேகமாக அடைந்துவிட்டதாகவும் பொதுமக்கள் கதைக்கின்றனர். எல்லாம் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமாக இருக்கும் மச்சான் சஜித். அந்த எதிர்நாற்காலியில் கொஞ்சம் நாளைக்கு இருந்து கொண்டிருங்கள்.

    ReplyDelete
  2. பழைய பாணியில்தான் தேர்தல் பிரசாரம் நடைபெறப்போகின்றது. அது ஒருபோதும் வெற்றியைக் கொண்டுவரமாட்டாது. புதிய உத்திகளையும் மக்களை நெருங்குவதற்கான புதிய புதிய வழிவகைகளைக் கண்டுபிடித்து அதன் மூலமாக தேர்தல் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும். பழைய பருப்பு கண்டிப்பாக வேகமாட்டாது என்பதை அரசியல்வாதிகள் கருத்தில் எடுக்க வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.