Header Ads



கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகம் முன், எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு


இந்தியாவின் தலைநகர் டெல்லியில் காவிப் பயங்கரவாதிகளின் வன்முறை வெறியாட்டம் அரச ஆதரவுடன் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

முஸ்லிம்களின் புனித வணக்கத்தலம் எரிக்கப்பட்டு. குர்ஆன் பிரதிகள் எரியூட்டப்பட்டும். கிழிக்கப்பட்டும் சேதமாக்கப்பட்டுள்ளன.

ஒரு வயோதிபப் பெண் (85 வயது) உயிருடன் எரியூட்டப்பட்டும், ஒரு கர்ப்பிணி பயங்கர சித்திரவதைக்குட்படுத்தப்பட்டும் கொல்லப்பட்டுள்ளனர். தற்போதைக்கு மொத்தம் 34 அப்பாவி முஸ்லிம்கள் அநியாயமாக காவிப் பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். நூற்றைம்பது பேர் வரையில் படுகாயங்களுக்குள்ளாகி,  பெரும் உயிர் அச்சுறுத்தலை எதிர்கொண்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காவிப் பயங்கரவாதிகளின் அராஜகம் மற்றும் கொலைவெறித் தாக்குதல்கள் ஊடாக இந்தியாவில் ஒரு இனப்படுகொலை அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை கண்டனம் தெரிவித்துள்ளது. உலகத் தலைவர்களும் கண்டித்துள்ளார்கள். மனித உரிமைகள் அமைப்புகள் பலவும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்திய முஸ்லிம்கள் உயிர்களையும், உடைமைகளையும் இழந்து பெரும் அச்சுறுத்தல்களை எதிர்நோக்கி இருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் அயல் நாட்டின் மனிதாபிமானமிக்க பிரஜைகள் என்ற ரீதியில் நாங்கள் வெறுமனே பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

எனவே இந்திய முஸ்லிம்களுக்கு ஆதரவைத் தெரிவிக்கவும், காவிப் பயங்கரவாதிகளின் அராஜகங்களுக்கு முடிவு கட்டாமல் ஊக்குவிக்கும் பாஜக தீவிரவாத அரசுக்கு ஜனநாயக முறையில் எதிர்ப்பைத் தெரிவிக்கவும் சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொள்ள உத்தேசித்துள்ளோம்.

கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகத்துக்கு முன்னால் பெப்ரவரி 28ம் திகதி வௌ்ளிக்கிழமை காலை பத்து மணிக்கு நடைபெறவுள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து விரும்பும் சமூக உணர்வுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும்.

தொடர்புகளுக்கு-
077 4940026
0777212755
076 6600896
075 5496876
ஏற்பாடு – பிரஜைகள் சமாதான சபை

3 comments:

  1. மிருகங்கள், எந்த சிறிய உயிருக்கும் ஒரு தொந்தரவும் செய்யக்கூடாது என போதிக்கும் பௌத்தங்கள் எங்கே? அயல்நாட்டில்,வயோதிபர்களையும், கர்ப்பிணிப் பெண்களையும் கொலை வெறியர்கள்,சித்திரவதை செய்து கொலை செய்யும் போது பௌத்தம் பேசும் மஞ்சல் காவிகளும், ஏன் அரசின் அதிகாரத்தில் இருக்கும் மந்தி(ரி)களுக்கும் ஏன் மௌனமாக இருக்கின்றனர், பாராளுமன்றத்துக்கு வௌியே மனிதாபிமானம் கொண்ட மனிதஜீவிகள் இந்த நாட்டில் இல்லையா? என கேட்கத் தோன்றுகின்றது.

    ReplyDelete
  2. முஸ்லிம்களைத் தவிர வேறு ஒரு சமூகமாக இருந்திருந்தால் இங்குள்ளவர்கள் குய்யோ முறையோ எனக் கத்தியிருப்பார்கள்.இவர்களது மனிதாபிமானமும் மண்ணாங் கட்டியும். இவர்களுக்கு வந்தால் இரத்தம். முஸ்லிம்களுக்கு வந்தால் தக்காளிச் சட்னி.

    ReplyDelete
  3. ANY BODY CAN UNDERSTAND THE FEELING OF SRI-LANAKN MUSLIMS RE-WHAT IS GOING ON IN DELHI.BUT IN THE MEAN TIME WHEN TAMILS WHO WERE KILLED IN MULIVAIKAL NO BODY CAN EXCUSE SOME MUSLIMS IN COLOMBO WHO JOINED THE KIRIBATH DANCE CELIBRATION IN MAY 2009.

    ReplyDelete

Powered by Blogger.