Header Ads



க‌ல்முனை துண்டாட‌ப்ப‌டும் நிலை ஏற்ப‌ட்டுள்ள‌து

முஸ்லிம் காங்கிர‌சின் இன‌வாத‌, பிர‌தேச‌வாத‌ செய‌ற்பாடுக‌ளினால் இன்று க‌ல்முனை துண்டாட‌ப்ப‌டும் நிலை ஏற்ப‌ட்டுள்ள‌து என‌ உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்தார்.

க‌ட்சி த‌லைமை காரியால‌ய‌த்தில் ந‌டைபெற்ற‌ உய‌ர்பீட‌ ஒன்று கூட‌லின் போது அவ‌ர் தெரிவித்த‌தாவ‌து,

எம‌து க‌ட்சி ஆர‌ம்பித்த‌ கால‌ம் தொட்டு நாம் முஸ்லிம் காங்கிர‌சை க‌டுமையாக‌ விம‌ர்சிப்ப‌தாக‌ எம்மை குற்ற‌ம் சாட்டிய‌வ‌ர்க‌ள் இப்போது புரிந்து கொண்டார்க‌ள் நாம் சொன்ன‌வை ச‌ரிதான் என்று.
க‌ல்முனையை பொறுத்த‌வ‌ரை ப‌ல‌ இன‌ங்க‌ளும் ப‌ல‌ ஊர்க‌ளும் கொண்ட‌ ஊராகும். இங்கு முஸ்லிம் காங்கிர‌ஸ் த‌ன‌து இருப்பை காக்க‌ க‌ல்முனையில் பிறைக்கொடியா புலிக்கொடியா என‌ பேசி இன‌வாத‌த்தை விதைத்து த‌மிழ் முஸ்லிம் வெறுப்பை விதைத்த‌ன‌ர்.

பின்ன‌ர் மு. கா த‌லைவ‌ருக்கும் த‌மிழ் கூட்ட‌மைப்புக்கும் இடையிலான‌ ஐ தே க‌வை ஆட்சிக்கு கொண்டு வ‌ரும் க‌ள்ள‌த்த‌ன‌மான‌ உற‌வு கார‌ண‌மாக‌ த‌மிழ‌ர்க‌ளுக்கெதிரான‌ இன‌வாத‌ம் பேச‌ முடியாமை கார‌ண‌மாக‌ ச‌கோத‌ர‌ சாய்ந்த‌ம‌ருது முஸ்லிம்க‌ளுக்கெதிராக‌ பிர‌தேச‌ வாத‌த்தை விதைத்த‌ன‌ர். 2011 க‌ல்முனை மாந‌க‌ர‌ச‌பை தேர்த‌லின் போது ஒரே க‌ட்சிக்குள் சாய்ந்த‌ம‌ருதான் மேயரா க‌ல்முனையான் மேய‌ரை என்ற‌ வாத‌த்தை உருவாக்கி ம‌க்க‌ளை பிரித்து வெற்றி பெற்ற‌ன‌ர்.

அப்போது யார் அதிக‌ம் விருப்பு வாக்கு பெறுகிறாரோ அவ‌ர் மேய‌ர் என‌ மு. கா த‌ர‌ப்பால் சொல்ல‌ப்ப‌ட்ட‌தால் அத‌ன் ப‌டி வெற்றி பெற்ற‌ சாய்ந்த‌ம‌ருது வேட்பாள‌ருக்கு அத‌னை கொடுத்திருக்க‌ வேண்டும்.

ஆனால் குர‌ங்கு அப்ப‌ம் ப‌ங்கு வைத்து பூனைக‌ளை ஏமாற்றிய‌து போன்று ஹ‌க்கீம் இரு ஊர்க‌ளையும் மூட்டிவிட்டார். ஹ‌க்கீமின் இந்த‌ குள்ள‌த்த‌ன‌த்துக்கு க‌ல்முனை மு. கா ஆத‌ர‌வாள‌ர்க‌ளும் துணைபோன‌த‌ன் விர‌க்தியே சாய்ந்த‌ம‌ருது ச‌பை போராட்ட‌மாகும்.

பின்ன‌ர் த‌ம‌து க‌ட்சிக்கு க‌ல்முனை மாந‌க‌ர‌ ச‌பையில் பெரும்பான்மை தேவைப்ப‌ட்ட‌ போது த‌மிழ‌ர் கூட்ட‌ணியை இணைத்துக்கொண்ட‌ன‌ர்.

இவ்வாறு ப‌ல‌ துரோக‌ங்க‌ளை க‌ல்முனைக்கு செய்த‌ முஸ்லிம் காங்கிர‌சையும் ர‌வூப் ஹ‌க்கீமையும் ஓர‌ம் க‌ட்டி க‌ல்முனை த‌லைமையிலான‌ க‌ட்சியை ப‌ல‌ப்ப‌டுத்தாத‌வ‌ரை க‌ல்முனை முஸ்லிம்க‌ள் தொட‌ர்ந்தும் இழ‌ப்புக்க‌ளை ச‌ந்திக்க‌ வேண்டி வ‌ரும் என‌ எச்ச‌ரிக்கிறோம்.

4 comments:

  1. மதிப்புக்குரிய முபறாக் அவர்களுக்கு. கல்முனையில் பிரதேச ரீதியான பிரிவினை வாதம் புதிய விடயமல்ல. 1950களின் தேர்தல் மேடைகளி எம்.எஸ்.காரிய்ப்பரும் ஏம். எம். மெர்சாவும் பேசிய பேச்சுக்களை வாசியுங்க. 2001ல் முதல் பிரிவினை சமாந்துறையல்லவா? வரிசையில் அடுத்ததாக கல்முனை வடக்கு தமிழ் பிரிவு நிற்கிறது. திருமணவயசுப் பிள்ளைகள் பிரிந்துபோவது குடும்பத்துக்கு எதிரான விடயமல்ல. பிரிதல் எல்லை பிரச்சினைகள் இல்லாமல் சுமூகமாக அமையவேண்டிப் பிரார்த்திப்போம் வருங்கள்.

    ReplyDelete
  2. இந்த சிவப்பு தொப்பி காரனுக்கு ஒரு நகரசபை தேசியப்பட்டியலாவது கொடுத்துவிடுங்கள் இவன் தொல்லை தாங்க முடியவில்லை

    ReplyDelete
  3. நீங்கள்தான் பெரிய உலமா கட்ச்சித் தலைவர், கல்முனைப்பிரச்சினைக்கு உங்களது தீர்வுதான் என்ன? தமிழர்கள் தங்களுக்கென ஒரு பிரதேச சபை கேட்பது தவறென்று சொல்கிறீர்களா? அல்லது சாய்ந்தமருது தனெக்கென ஒரு பிரதேசசபை கேட்பது தவறென்கிறீர்களா? இப்பிரச்சினை முஸ்லீம் காங்கிரஸ் தலைவரினால் உருவாக்கப்பட்டதென்றால், இங்குள்ள அரசியல்வாதிகள் மற்றும் தலைவர்களுக்கு எதுவும் தெரியாது, இதனைத் தீர்க்கத்தேவையில்லை என்கிறீர்களா? அரசியல் பேசுவதாக இருந்தால் தயவுசெய்து தேர்தல் வருகிறது இக்கட்சியின் பெயரில் கட்டுப்பணம் செலுத்தி தேர்தலுக்கு வாருங்கள் மேடையில் பேசுங்கள் அதைவிடுத்து கல்முனையினை ஒரு உலமாவாக இன்னும் அசிக்கப்படுத்தவேண்டாம், அதனை இனிவரும் காலங்களில் வரும் அரசியல்வாதிகள் மேலும் அசிங்கப்படுத்துவார்கள் என்பதில் ஐயமில்லை

    ReplyDelete
  4. THIS UALAMA LEADER HAS NOTHING IN HIS HEAD OTHER THAN HIS RED CAP.UNDER THE CURRENT POLITICAL SITUATION IN THE COUNTRY MUSLIM AND TAMILS MUST STOP THROWING STONES AT EACH OTHER RE-THIS PROBLEM.THE LEADERS MUST DISCUSS TO FIND A REASONABLE SETTLEMENT.FAILING WHICH THERE IS A POSSIBILITY A FORMER ARMY MAN WILL BE APPOINTED AS SECETARY OF THIS KALMUNAI DIVISION.

    ReplyDelete

Powered by Blogger.