Header Ads



வாசிக்காமலேயே கையொப்பமிட்டுள்ள, சாய்ந்தமருது நகரசபை வர்த்தமானி - பந்துல

சாய்ந்தமருது பிரதேசம், புதிய நகர சபையாக மாற்றப்பட்டதாக வெளியான வர்த்தமானி வாசிக்காமலேயே கையொப்பமிட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

கடந்த 14ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி குறித்த நாங்கள் அறிந்திருக்கவில்லை. அது நல்லாட்சி அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட அமைச்சரவை தீர்மானத்திற்கமைய தயாரிக்கப்பட்ட வர்த்தமானியாகும்.

அதனை அறியாமல் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் கையொப்பமிட்டுள்ளார். இது தற்போதைய அமைச்சரவையின் இணக்கத்திற்கமைய வெளியிடப்படவில்லை. இதன் காரணமாக 2018 ஆம் ஆண்டு அமைச்சரவை தீர்மானத்திற்கமைய தயாரிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை தீர்மானம் ஒன்றை எடுத்தால் அதிகாரிகளினால் அமைச்சரவை தீர்மானத்திற்கமைய நடவடிக்கை மேற்கொண்டு வர்த்தமானியை அமைச்சரிடம் ஒப்படைத்து கையொப்பமிட வேண்டும்.

அதனை வாசித்தும் வாசிக்காமலும் கையொப்பமிடுவார்கள். ஏன் என்றால் அமைச்சரால் அனைத்து பக்கங்களையும் முழுமையாக வாசித்து கையொப்பமிட முடியாது. அதற்கமைய வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய குறித்த வர்த்தமானி தற்காலிகமாக ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.