Header Ads



அகந்தை கொண்டவர்களிடம் இருந்து, ஜனாதிபதி கோட்டாபயவை பாதுகாக்க வேண்டும்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஜனாதிபதியின் வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிக்கும் நபர்களையே தெரிவு செய்ய வேண்டும் எனவும் அவரது பிரதிநிதி, இவரது பிரதிநிதிகளை அல்ல எனவும் பேராசிரியர் நளின் டி சில்வா தெரிவித்துள்ளார்.

கோட்டபாய ராஜபக்சவை ஜனாதிபதி பதவிக்கு கொண்டு வர சிங்கள - பௌத்த நிலைப்பாடுகளை உருவாக்க முக்கிய பங்காற்றிய நளின் டி சில்வா தனது பேஸ்புக் பக்கத்தில் இதனை கூறியுள்ளார்.

19 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் இருக்கும் வரை வேறு அரச நிறுவனங்கள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு தடைகளை ஏற்படுத்தும்.

இந்த திருத்தச் சட்டத்தை திருத்த கட்டாயம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் அவசியம். எதிர்வரும் பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும். பல அரசியல் கட்சிகள் இதனை எதிர்க்கலாம். நாமும் அவர்களை எதிர்க்க நேரிடும். தடைகளை ஏற்படுத்தும் நபர்களுக்கும் நாம் தடைகளை ஏற்படுத்த வேண்டும். அவர்களுக்கு வாக்களிக்கக் கூடாது.

முழு நாட்டு மக்களின் பெரும்பான்மை விருப்பத்திற்கு அமைய நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டார் என்பதை மறக்கக் கூடாது. மாவட்டங்களுக்கு மாத்திரமல்ல, தமது பிரதேசங்களில் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு தடையேற்படுத்தக் கூடாது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் உள்ள அகந்தை கொண்டவர்களிடம் இருந்து கோட்டாபயவை பாதுகாக்க வேண்டும் எனவும் நளின் டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. THE COMING PARLIAMENT ELECTION IN GOING TO BE AN ACID TEST TO SLPP WHEN SHARING SEATS AMONG THE FOLLOWING GROUPS.
    MAHINDA SUPPORTERS
    BASIL SUPPORTETS
    NAMAL YOUNG SUPPORTERS
    GOTHA GROUP OF ELIYA-VIATHGAMA SUPPORTERS
    YES SIR YES SIR GROUP OF WEERAWANSA-GAMANPILAI GROP
    BREAKAWAY GROUP FROM MY3 SUPPORTERS.
    BECAUSE OF THIS IN FIGHTING UNP WILL GET SOME ADDITIONAL SEATS IF THEY CONTEST AS ONE GROUP TOGETHER AS RANIL-SAJITH-FONSEKA-RAVI-NAVIN-AND KARU.

    ReplyDelete

Powered by Blogger.