Header Ads



வுஹான் நகர்சென்ற விமான பணிக்குழாமினரை பாராட்டி, விருந்துபசாரம் அளித்த ஜனாதிபதி

வுஹான் நகருக்குச் சென்று அங்குள்ள இலங்கை மாணவர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு உயிர் ஆபத்தையும் பொருட்படுத்தாது தன்னார்வத்துடன் செயற்பட்ட ஸ்ரீலங்கன் விமான பணிக்குழாமினரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாராட்டியுள்ளார்.
ஜனாதிபதியின் விசேட அழைப்பின்பேரில் நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் அவர்களுக்கு விருந்துபசாரம் அளிக்கப்பட்டது.
ஸ்ரீலங்கன் விமான சேவையின் தலைவர் அசோக் பத்திரகே, பணிப்பாளர் சபை மற்றும் அந்த நடவடிக்கையில் ஈடுபட்ட விமானிகள், பொறியியலாளர்கள் மற்றும் பணிக்குழாமினருக்கு ஜனாதிபதி இதன்போது பாராட்டுதல்களை தெரிவி;த்துள்ளார்.
குறித்த நடவடிக்கையில் ஈடுபட்ட பணிக்குழாமினர் தாய் நாட்டுக்காக மேற்கொண்ட அர்ப்பணிப்பு நாட்டின் அனைத்து துறைக்கும் ஒரு சிறந்த முன்னுதாரணமாகும் எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. உண்மையில் பாராட்ட வேண்டிய மனிதாபிமான செயல்

    ReplyDelete
  2. The crew must have been checked and confirmed after their return, before this get together. Otherwise, Mr. Gotta would be infected by now.

    ReplyDelete

Powered by Blogger.