Header Ads



சாய்ந்தமருதை தனியாக பிரித்தமையை, வரவேற்கிறார் ஞானசார தேரர்

சாய்ந்தமருதில் புதிய பிரதேச செயலகம் உருவாக்கப்பட்டதைப் போன்று, கல்முனையிலும் தனிப் பிரதேச செயலகத்தை உருவாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் தெரிவிக்கையில்

சாய்ந்தமருது தனி பிரதேச செயலக பிரிவாக பிரித்தமை உண்மையில் வரவேற்கத்தக்க ஒன்றாகும். இதுதொடர்பில் பலரும் அச்சமடைந்து வருகிறார்கள்.

ஆனால், அவ்வாறு அச்சமடையத் தேவையில்லை. இது மேற்கொள்ளப்பட வேண்டிய செயற்பாடாகத்தான் நாம் கருதுகிறோம்.

அதேபோல், 30 வருடங்களாக கல்முனையில் தனிப் பிரதேச செயலகம் வேண்டும் என தமிழ் மக்கள் கோரிக் கொண்டிருக்கிறார்கள்.

இதுதொடர்பாக போராட்டங்களைக் கூட தமிழர்கள் மேற்கொண்டிருந்தார்கள்.

எனவே, சாய்ந்தமருது மக்களுக்கு செய்த சேவையைப் போல, இந்த தமிழ் மக்களுக்கான கோரிக்கைகையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எனவே, கல்முனையில் தனியான பிரதேச சபை ஒன்றை உருவாக்க வேண்டும் என்பதுதான் எமது கோரிக்கையாக இருக்கிறது.

சஹ்ரானின் சம்பவத்தை வைத்துக் கொண்டு இந்த விடயத்தில் சிலர் கருத்து வெளியிட்டாலும், அரசாங்கத்தின் தற்போதைய செய்றபாடு தொடர்பாக எவரும் குழப்பமடையத் தேவையில்லை என அவர் கூறினார்.

6 comments:

  1. something good came out of him now.

    ReplyDelete
  2. ஒவ்வொருத்தருக்கும் அவரவர் நிலத்தை ஆழும் உரிமை உண்டு.

    ReplyDelete
  3. Hahahajaa...not something... He knows what is hard point for Kalmunai Muslims and even those idiots by this arrangement by orange lovers... Orange lovers happiness will no longer when they face the critical time for them and kalmunai Muslims... This is why this saaraa paambu is happy... Not for good habbit

    ReplyDelete
  4. முஸ்லிம்களின் கல்முனை நகரத்தை சிதைப்பது தானே இவர்களுடைய திட்டம். இன்று அது சாய்ந்தமருது முஸ்லிம்களாளே அது நிறைவேறிவிட்டது.

    ReplyDelete
  5. கல்முனைக்குடியான் ஏறி சவாரி செய்ய சாய்ந்தமருதூரான் ஒன்னும் எருமை மாடு அல்ல என்பதை குடியிருப்பானுகள் விளங்க தவறியதன் விளைவுதான் இது.

    ReplyDelete
  6. See what happening in middle east.the zionist and american well plan to divided our muslims in to country,tribe, and sector.so life time we are enemies to each others.

    ReplyDelete

Powered by Blogger.