Header Ads



ஈஸ்டர் தாக்குதல்: குற்றமற்ற முஸ்லிம் இளை­ஞ­ர்களை விடுதலை செய்ய முடியுமா? பிரதி சொலிசிட்டர் ஜெனரலுடன் முஸ்லீம் எம்.பி.க்கள் சந்தித்து பேச்சு

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்­கு­தல்­க­ளை­ய­டுத்து சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்டு இது­வரை காலம் எது­வித குற்­றப்­பத்­தி­ரி­கையும் தாக்கல் செய்­யப்­ப­டாது விசா­ர­ணை­க­ளுக்­கென தடுப்­புக்­கா­வலில் வைக்­கப்­பட்­டி­ருக்கும் முஸ்லிம் இளை­ஞர்­களின் விடு­தலை தொடர்பில் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் சிலர் பிரதி சொலி­சிட்டர் ஜெனரல் ரோஹன்த அபே­சூ­ரி­யவைச் சந்­தித்து கலந்­து­ரை­யா­டினர்.

இந்தச் சந்­திப்பு பிரதி சொலி­சிட்டர் ஜெனரல் ரோஹன்த அபே­சூ­ரி­ய­வுக்கும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், பைசர் முஸ்­தபா மற்றும் முஜிபுர் ரஹ்மான் ஆகி­யோ­ருக்­கு­மி­டையில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்தில் இடம்­பெற்­றது.

முஸ்லிம் இளை­ஞர்கள் ஏப்ரல் குண்­டுத்­தாக்­கு­தல்­களைக் காரணம் காட்டி இது­வரை எவ்­வித குற்­றப்­பத்­தி­ரி­கையும் தாக்கல் செய்­யப்­ப­டாமல் தடுப்புக் காவலில் வைக்­கப்­பட்­டி­ருப்­ப­தா­கவும் அவர்கள் பல்­வேறு பாதிப்­பு­க­ளுக்கு உள்­ளா­கி­யி­ருப்­ப­தா­கவும் சுட்டிக்காட்­டினர்.

இவ்­வாறு அவர்கள் சந்­தே­கத்தின் பேரில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருப்­பதால் சமூ­கத்தில் அவர்­க­ளது நற்­பெ­ய­ருக்கு களங்கம் ஏற்­ப­டு­கி­றது.
இவர்­களில் சிலர் மாண­வர்கள் பல்­க­லைக்­க­ழக அனு­ம­தியை எதிர்­நோக்­கி­யி­ருப்­ப­வர்கள் மேலும் சிலர் கற்கை நெறி­களை தொடர்ந்­த­வர்கள். இதனால் கல்­வித்­து­றை­யிலும் இவர்கள் பின் தங்கும் நிலை ஏற்­பட்­டுள்­ளது என்று விளக்­க­ம­ளித்த பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அவர்­க­ளது விடு­தலை தொடர்பில் கவனம் செலுத்­து­மாறும் உரிய நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளு­மாறும் வேண்டினர்.

பாராளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கையை செவிமடுத்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல் இது தொடர்பில் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கைகளை மேற் கொள்வதாக உறுதியளித்தார்.-vidivelli

ஏ.ஆர்.ஏ.பரீல்

1 comment:

  1. same kind of Islam is promoted by Saudi. Saudi funded this kind of Islam in many parts of the world, Now Muslims all over the world pay the price for wrong Saudi form of Islam

    ReplyDelete

Powered by Blogger.