Header Ads



முஸ்லிம் உலகில் முதல், மின்சாரம் வழங்கப்பட்ட இடம்

துருக்கியில் அமைந்துள்ள உஸ்மானிய அரச மாளிகைக்கு மின்சாரம் வழங்குவதற்காக ஜேர்மனியை சேர்ந்த மின் பொறியியலாளர்கள் (Electrical Engineers) முன்வந்தார்கள்.

ஆனால் சுல்தான் அப்துல் ஹமீத் அவர்கள் இதற்கு மறுப்புத்தெரிவித்துவிட்டார்கள்.

தான் வசிக்கும் அரச மாளிகைக்கு மின்சாரம் வழங்க முன்னதாக நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மஸ்ஜிதுன் நபவி பள்ளிவாசலுக்கே முதன் முதலாக மின்சாரம் வழங்கப்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.

இதற்கு அமைய 1908ம் ஆண்டு செப்டம்பர் 22ம் திகதி சுல்தான் 2ம் ஹமீதின் உத்தரவுக்கு அமைய இஸ்லாமிய உலகில் மஸ்ஜிதுன் நபவியில் மின்குமிழ்கள் பொருத்தப்பட்டு மின்சாரம் வழங்கப்பட்டது.

இதேவேளை மஸ்ஜிதுன் நபிவிக்கு முதலில் மின்பிரப்பாக்கி இயந்திரத்திற்கான நன்கொடையை வழங்கியவர்கள் " ஹைத்ராபாத் நிஸாம்கள் (Nizams of Hyderabad) ஆவர்.

படம் :- முஸ்லிம் உலகில் பொருத்தப்பட்ட முதல் மின்விளக்கும் 1908 September 02, மஸ்ஜிதுன் நபவியும்.

பஸ்ஹான் நவாஸ்

2 comments:

  1. Wrong In formations.
    Its not Nisam.. Its Hyderabad Nawabs.
    Nawab's Who gave Electric to Masjid Haram and also Nabavi/Madinan.

    ReplyDelete
  2. இம்மின்சார வெளிச்சம் போன்றே இன்று  ஈமானிய வெளிச்சமும் அதே வரிசையில் பிரகாசமாக்கப்படல் வேண்டும்.

    அப்போதே மதீனாவில் தொடங்கி, துருக்கியின் அப்போதைய தலைநகராமாகிய இஸ்தான்பூலை இடை இறுதி  இஸ்லாமிய தலைநகராகக் கொண்டு இயங்கி, 13 நூற்ராண்டுகள் உலகுக்கே ஒளி கொடுத்த இஸ்லாமிய கிலாபத்தை மீள உருவாக்கலாம்.

    அப்போதே அழிவுகளாலும் அநீதிகளாலும் மூழ்கியுள்ள இந்தப் பூமியை அனைவரும் வாழ்வதற்கு வசந்தமானதாக மாற்றலாம்.

    மதீனத்து மாநபியின் வழிகாட்டல்கள் அனைவர்க்குமானது;  அகிலத்துக்குமானது.

    அவற்றைத் நம் வாழ்வில் ஏற்று நடப்பது கொண்டே, இந்த வெறும் ஒரு நூற்றாண்டில் மாத்திரம் இல்லாது தவிக்கும் இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தை இழந்த இடத்தில் இருந்து  மீள உருவாக்கலாம்.

    நம்பிக்கையாளர்களின் முதலாவது கடமையும், இறுதித் தூதரின் இறுதிப் போதனையுமான இறைவனுக்கு நன்றி செலுத்தும் ஐவேளைத் தொழுகையை அனைவரும்  நிலைநிறுத்துவது கொண்டே இது சாத்தியம் என நினைக்கின்றேன்.

    ReplyDelete

Powered by Blogger.