Header Ads



பொதுஜன பெரமுனவில் முஸ்லிம், வேட்பாளர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படாதா ?

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் முஸ்லிம் வேட்பாளர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படாது என்று கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வரும் செய்தி உண்மைக்கு புறம்பானது என கண்டி உடுநுவர பிரதேச சபை உறுப்பினர்' அல்ஹாஜ் மதீனம் அவர்கள் தெரிவித்தார்கள்.

ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன சார்பில் கண்டி மாவட்டத்தில் அல்ஹாஜ் ஏ.எல்.எம். பாரிஸ் அவர்கள் போட்டியிட முனைப்புடன் செயற்பட்டும் வரும் நிலையில் சமூக வலைத்தளங்களில் பரப்பபட்டு வரும் இச்செய்தி குறித்து  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கண்டி மாவட்ட பொறுப்பாளர் திரு. மஹிந்தானந்த அலுத்கமகே அவர்களை தொடர்பு கொண்டு தான் வினவியதாகவும் இதுவரை அப்படியான எந்தவித பேச்சுவார்த்தைகளும் இடம்பெறவில்லை என அவர் தெரிவித்தாகவும் மதீனம் குறிப்பிட்டார்.

இது பற்றி அவர் மேலும் தெரிவிக்கையில் ஸ்ரீலங்கா பொத ஜன பெரமுன சார்பில் போட்டியிட சந்தர்ப்பம் மறுக்கப்பட்டவர்கள் அல்லது சுயேற்சையாக போட்டியிட திட்டமிட்டுள்ளவர்களே இவ்வாறு உண்மைக்கு புறம்பான தகவலை வெளியிட்டுள்ளதாகவும் கட்சியால் வாக்களிக்கப்பட்ட படி ஏற்கனவே திட்டமிட்டவாறு நாட்டில் குறிப்பிட்ட பிரதேசங்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

_safwan

No comments

Powered by Blogger.