Header Ads



சிறைக்குள் விஷ ஊசியொன்றை ஏற்றி கொலை முயற்சி - கஞ்சிபானி இம்ரானின் உதவியாளர் மீது மோசமான தாக்குதல்

கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, ஓழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய  குழுவின் உறுப்பினரான கொஸ்கொட தாரக,  அங்கு தடுத்துவைக்கப்பட்டுள்ள கஞ்சிபானி இம்ரானின் உதவியாளர் ஒருவர் மீது, மோசமான முறையில் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக  லங்காதீப செய்தி வெளியிட்டுள்ளது.

சிறைச்சாலையில் “ஐ” பிரிவில் கடும் பாதுகாப்புடன் தடுத்துவைக்கப்பட்டுள்ள கொஸ்கொட தாரக, அங்கிருந்து சென்று, “சீ” பிரவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஹர்ஷ என்ற நபர் மீது தாக்குதல் நடத்தியமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலைக்குள் நபர் ஒருவருக்கு விஷம் அடங்கிய ஊசியொன்றை ஏற்றி கொலை செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஷ ஊசியேற்றி கொலை செய்ய முயற்சித்தமை தொடர்பில் பொரளை பொலிஸ் நிலையத்தில் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதல் சம்பவத்தை அடுத்து, கொஸ்கொட தாரக, அவரது சகோதரர், ஏனைய மூவரை புஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கு  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போதும், கொஸ்கொட தாரக, அவரது சகோதரர் ஆகியோர் தொடர்ந்தும் கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையிலேயே உள்ளதாக அறிய முடிகின்றது.

No comments

Powered by Blogger.