Header Ads



தாமரை மொட்டுச் சின்­னத்­துக்கே வாக்­க­ளிக்க வேண்­டு­மென அச்­சு­றுத்­து­கின்­றனர். அமீர் அலி

மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தின் கல்­குடா தொகு­தியில் அர­சியல் ரீதி­யான அச்­சு­றுத்­தல்கள் அதி­க­ரித்­து­வ­ரு­கின்­றன. இது­தொ­டர்­பாக பாது­காப்பு அமைச்சர் உட­ன­டி­யாக நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அமீர் அலி கோரிக்கை விடுத்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வியா­ழக்­கிமை விசேட வியா­பாரப் பண்­டங்கள் அற­வீட்சுச் சட்­டத்தின் கீழ் கட்­டளை மீதான விவா­தத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்றும் போதே இவ்­வாறு தெரி­வித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து குறிப்­பி­டு­கையில்,

நாட்டில் அனைத்து இன­மக்­களும் சம­மா­கவே நடத்­தப்­ப­டு­வார்­க­ளென ஜனா­தி­பதி கூறி­யுள்ளார். ஆனால், மட்­டக்­க­ளப்பு கல்­குடா தொகு­தியில் சிலர் பொது மக்­களை அர­சியல் ரீதி­யாக அச்­சுத்­து­கின்­றனர். குறிப்­பாக தாமரை மொட்டுச் சின்­னத்­துக்கே எதிர்­கா­லத்தில் வாக்­க­ளிக்க வேண்­டு­மென அச்­சு­றுத்­து­கின்­றனர். ஜனா­தி­பதி இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.

மேலும் இலக்க தக­டுகள் இல்­லாத சில மோட்டார் சைக்­கிள்கள் எமது பிர­தே­சத்தில் இருக்­கின்­றன. அதி­க­மாக பேசினால் கடத்­தப்­ப­டு­வீர்கள் எனவும் அச்­சு­றுத்­து­கின்­றனர். ஜனா­தி­பதி அவ்­வா­றான கொள்­கை­யு­டை­யவர் அல்ல என எமக்குத் தெரியும். ஆகவே, பாது­காப்பு அமைச்சு இந்த விடயம் தொடர்பில் உட­ன­டி­யாக கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

இக்­குற்­றச்­சாட்­டுக்கு இரா­ஜாங்க அமைச்சர் செஹான் சேம­சிங்க பதி­ல­ளிக்­கையில்,

இந்த விடயம் தொடர்பில் பொலிஸ் மற்றும் சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்தும் நிறு­வ­னங்­க­ளுக்கு தெரி­யப்­ப­டுத்­தப்­பட்­டுள்ளனவா? என வின­வி­ய­துடன், உயிர்த்த ஞாயி­று­தினத் தாக்­கு­தல்கள் தொடர்பில் எமது சமூ­கத்தில் இன்­னமும் கசப்­பான அனு­ப­வ­மொன்று காணப்­ப­டு­கி­றது.

இவ்வாறான செயற்பாடுகள் மோசமானவையாகும். உடனடியாக இச்சம்பவம் தொடர்பில் முறைப்பாடுகளை செய்யுமாறும் அதற்கு அரசாங்கம் நடவடிக்கையெடுக்க தயார் என்றும் கூறினார்.-Vidivelli

எம்.ஆர்.எம்.வஸீம்

No comments

Powered by Blogger.