Header Ads



முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை, குறைக்க வேண்டும் திட்டம்

AL Thavam 

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை (SLPP) பொறுத்தவரை, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அம்பாரை தேர்தல் தொகுதியிலும், சம்மாந்துறை, பொத்துவில் தேர்தல் தொகுதிகளிலுள்ள சிங்கள பிரதேசங்களிலும் சேர்த்து சுமார் 100,000 வாக்குகளை பெற்றுள்ளது. 
✔️அதனால், அந்த 1,00,000 சிங்கள வாக்குகளையும் 03 சிங்கள வேட்பாளர்களுக்கு தலா 1,00,000 வீதம் தெரிவு வாக்குகளாக வழங்கவோ
✔️அல்லது 04 சிங்களவர்களுக்கு தலா 50,000 ஆக தெரிவு வாக்குகளை பிரித்து (100,000x3=150,000/4=50,000) வழங்கவோதான் சந்தர்ப்பமுள்ளது.
✔️அதாவது ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு இரண்டு உறுப்பினர்கள் கிடைத்தாலும் - நான்கு உறுப்பினர்கள் கிடைத்தாலும் அவை சிங்களவர்களாகவே இருக்க வேண்டும் என அவர்கள் முயற்சிப்பர் என்று ஏலவே நாம் கூறி இருந்தோம்.
அதாவது, மொட்டு சின்னத்தில் (SLPP) போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளர்களுக்கு அளிக்கப்படும் வாக்குகள் - சிங்கள வேட்பாளர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்பவே உதவுமே தவிர - முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்றுத்தராது.
அதனை சிலர் மறுத்தனர். ஆனால், தற்போது அரச அதிபர் சுனில் கன்னங்கரவை அம்பாரை மாவட்டத்தில் களமிறக்குவதற்கான புதிய திட்டம் எமது எதிர்வுகூறலை இன்னும் உறுதிப்படுத்துவதாகவே அமைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், அவர் தமிழ் , முஸ்லிம் வாக்குகளையும் கவரக்கூடியவர் என்பது இன்னும் ஆபத்தான விடயமாகும்.
மொத்தத்தில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை குறைக்க வேண்டும் என்ற திட்டத்தில் அவர்கள் மிகத்தெளிவாக இருப்பதாகவே உணரப்படுகிறது. ஒருபுறம் நடக்கவிருக்கும் தேர்தலில் திட்டமிட்டே முஸ்லிம் உறுப்பினர்களை தற்காலிகமாக குறைப்பதும் - தேர்தலின் பின்னர் பாராளுமன்ற வெட்டுப்புள்ளியை 12.5% ஆக அதிகரித்து நிரந்தரமாக குறைப்பது என்ற அவர்களின் நிகழ்ச்சி நிரல் மிகத்தெளிவாக உள்ளது.
ஆனால், நாம்தான் உணர மறுக்கிறோம். சில அற்ப நண்மைகளுக்காக ஆலாய்ப் பறக்கிறோம்.

3 comments:

  1. 150000 /4= 50000 ??? Is it new maths?

    ReplyDelete
  2. நீங்கள் சார்ந்த கட்சி மூலம் நான்கு எடுக்க முயற்சி செய்யுங்கள்.
    எவ்வாறு என்று கணக்கையும் காட்டுங்கள்

    ReplyDelete
  3. ஒருவருக்கு 3விருப்பு வாக்குகள் உள்ளது எனவே விருப்பு வாக்குகளின் மொத்த எண்ணிக்கை 300,000/ அதில் 4பேருக்கு தலா 50,000எடுக்க முடியும்.

    ReplyDelete

Powered by Blogger.