Header Ads



விமல் வீரவன்ஸ ஓரு, நவீன மனநோயாளி - சிறீதரன்

விமல் வீரவன்ஸ ஓரு நவீன மனநோயாளி சிங்களத்தலைவர்கள் கடந்த கால படிப்பினைகளில் இருந்து பாடங்களைக் கற்றுக்கொள்ளவில்லை எமது உரிமைகளைத்தர மறுத்த போதுதான் தமிழர்கள் போராடினார்கள் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

கட்டைக்காடு கேவில் பகுதி மக்களுடனான சந்திப்பு நடைபெற்ற போது. அங்கு கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் காணாமல் ஆக்கப்பட்டவர்களை மண்ணுக்குள் தோண்டி தேடுங்கள் என்ற கருத்து மனநிலை பாதித்தவர் ஒருவரின் கதையாகத்தான் உள்ளது இந்த அரசாங்கம் தாங்கள் புதைத்த இடத்தைக்காட்ட வேண்டும் இந்த நாட்டின் ஜனாதிபதி தொடக்கம் அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் அனைவரும் தமிழர்களை கொடூர வெறியுடனே பார்க்கிறார்கள்.

தமிழர்களின் இரத்தங்களைக்குடிக்க காத்துக்கொண்டிருப்பது போன்றும் அவர்களின் செயற்பாடுகள் அமைந்து கொண்டிருக்கின்றது. வீமல வீரவன்ச ஒரு நவீன மனநோயாளி எனவும் இந்த அரசு தமிழர்களை அடக்கி ஆளவும் ஓடுக்கி ஆளவும் தொடர்ந்து முயற்சிக்கிறது என்றார்.

குறித்த சந்திப்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சு.சுரேன் உபதவிசாளர் கயன் பிரதேசசபை உறுப்பினர்களான றமேஸ்,வீரவாகுதேவர் தன்னார்வத்தொண்டு நிறுவனத்தின் பிரதிநிதி ஞானம் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப்பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. தமிழர், தமிழ் இனம் என திரும்பத்திரும்ப பாடுபவர்களும் ஒருவகையில் இனவாத மனநோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இனங்களுக்கு அப்பால் ஒவ்வொருவரும் மனிதநேயத்துடன் விடயங்களை அணுக வேண்டும். சில வேளை சிங்கள இனமும் பௌத்த தத்துவமும் அடுத்த யுகமாகும் போது இந்த நாட்டில் இருந்து அழிந்துவிடும் என்ற ஒரு பயம் அந்த சமூகத்தின் படித்தவர்களிடையே பரவலான நம்பிக்ைகயாக இருக்கின்றது. அதன் விளைவாக அவர்கள் சிங்களத்துவத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம். ஆனால் நாம் இனங்களுக்கு மேல் மனித நேயத்துடன் விடயங்களை அணுகினால் அவற்றுக்குத் தீர்வு காணுவது அவ்வளவு சிரமமாக அமையாது.

    ReplyDelete

Powered by Blogger.