Header Ads



சாய்ந்தமருது நகரசபை உருவாக்கத்தை நானே நிறுத்தினேன் - கருணா

நான் துரோகி என்றால் த.தே.கூட்டமைப்பிலுள்ள அனைவரும் துரோகிகளே என முன்னாள் பிரதியமைச்சரும், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமான கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

ஏனெனில் அன்று மாவையைத் தவிர அனைவரையும் சுடச்சொல்லித்தான் கட்டளை. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் எப்போதாவது என்னைத்துரோகி என்று சொன்னாரா? யாராவது சொல்லட்டும். பகிரங்கமாக சவால் விடுகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

காரைதீவு விபுலானந்தா கலாச்சார மண்டபத்தில் நேற்று -22- இடம்பெற்ற கலந்துரையாடலில் பங்கேற்று உரையாடும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

நான் அம்பாறைக்கு வந்தால் தமிழ்ப் பிரதிநிதித்துவம் இல்லாமல் போகுமாம். சரி இந்த கோடீஸ்வரன் இதுவரை இருந்து சாதித்தது என்ன? அவர் தேர்தலில் வெளியிட்ட விஞ்ஞாபனம் உள்ளதே.

அதில் ஒன்றையாவது செய்திருந்தால் அவரை மன்னிக்கலாம். ஒன்றையாவது செய்தாரா? இல்லையே. அம்பாறை மாவட்டத்தில் ஒரு இலட்சத்து 25 ஆயிரம் தமிழ் வாக்குகள் உள்ளன.

சரி 60 வீதமானோர் வாக்களித்தால் 70ஆயிரம் வாக்குகள் விழும். அப்படிப்பார்த்தால் 2 ஆசனங்களையே பெறக்கூடிய வாய்ப்பு உருவாகும்.

இந்த நிலையில் தமிழ் பிரதிநிதித்துவம் எவ்வாறு இல்லாமல்போகும்? 19 வயதில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் மட்டு. அம்பாறை தளபதியாகியது நான் மட்டுமே.

வடமராட்சி ஒப்பரேசன் தொடக்கம் தலைவருக்கு ஆபத்து என்ற நேரத்திலெல்லாம் எமது மட்டு. அணிதான் அங்கு சென்று சரித்திரம் படைத்ததை அனைவரும் அறிவார்கள்.

எனவே அம்பாறை மாவட்ட தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டிய தேவை எனக்குள்ளது. கல்முனைத் தமிழ் பிரதேச செயலக விவகாரம் கடந்த 30 வருட காலமாக முன்னெடுத்துக் கொண்டிருக்கையில் சாய்ந்தமருது நகரசபை உருவாக்கம் திடீரென நடந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

குறித்த அமைச்சரிடம் கேட்டபோது தனக்குத் தெரியாது என்றார். உடனடியாக பிரதமர் ஜனாதிபதியிடம் தொடர்பு கொண்டு நானே அதை நிறுத்தினேன். சாய்ந்தமருது நகரசபையாகலாம் மாநகரசபையாகலாம். அது பிரச்சினையல்ல.

ஆனால் எமது பிரதேச செயலகம் தரமுயர்த்தப்பட வேண்டும். இதில் மாற்றுக் கருத்துக்கிடமில்லை. எல்லை நிர்ணயம் என்று கூறி இழுத்தடிக்க முடியாது.

தமிழர் பூர்வீகமாக வாழ்ந்த கல்முனையை எமது இடமென்று கூறிக் கொண்டு செயலகம் தரமுயர்த்த முடியாது என்று சொல்லயாருக்கும் உரிமையில்லை.

எனவேதான் உரிமை அபிவிருத்திக்காக அதிகாரத்தோடு குரல் எழுப்ப நாடாளுமன்றம் செல்ல வேண்டும். முன்பு இரு தடவைகள் தேசிய பட்டியலில் நாடாளுமன்றம் சென்றேன்.

ஆனால் இம்முறை அம்பாறைத் தமிழ் மக்களுக்காக தேர்தலில் நின்று நாடாளுமன்றம் செல்வேன். அதற்கு ஒரு வாய்ப்பைத்தாருங்கள் என கோரியுள்ளார்.

8 comments:

  1. 😄😄😄😄😄😄😄😄😄

    ReplyDelete
  2. யாருக்கும் அநியாயம் செய்ய முயற்சிக்காதிர் இன்னும் மொரு சுனாமி அலை இறைவனால் அனுப்பப்பட்டால் எந்த ஒரு சபையும் இலங்கையில் இருக்காது என்பதை புரிந்து கொள்ளுங்கள்!

    ReplyDelete
  3. எங்களுக்கு ஆட்சி செய்ய தனியாக பூமி வேண்டும் என்று மக்களை கொலைசெய்த உங்கள் தலைவன் பிரபாகரன் கடைசியில் 6அடி நீளத்தின் ககுழியில் புதைக்கப்பட்டுவிட்டார் அதே நிலைமைதான் நம் அனைவருக்கும் உறியது *

    *நமது செல்வம் நாம் உண்டதும், அணிந்த்தும் ,நாம் கஸ்டப்பட்டு நல்லமுறையில் உழைத்ததிலிருந்து ஏழைகளுக்கும நன்கொடையாக கொடுத்தவைகள் மட்டும்தான்*

    ReplyDelete
  4. சாய்ந்தமருது தொடர்பான அரசியல் முடிவு அறிவிக்கபட்டிருப்பினும் அது நிர்வாக முடிவாக அறிவிக்கமுன்னம் குழு அறிக்கை கோரபட்டுள்ளது அல்லவா? அதற்க்குள் ஆர்வக்கோளாற்றால் யாரோ செயல்பட்டிருக்கிறார்கள் எனத் தோன்றுகிறது. கல்முனை பிர்வு தொடர்பான குழு அறிக்கை வெளிவரவேண்டுமல்லவா? கல்முனைவடக்கு பிரதேச செயலக அந்தஸ்த்துபற்றியும் சாய்ந்தமருது உட்பட ஏற்படவுள்ள கல்முனையில் உருவாக உள்ள நகர சபைகள் பற்றியும் தீர்மானத்தை அரசு இறுதி செய்ய அவகாசம் வேண்டுமல்லவா? க்காக்கப் பொறுத்தவர்கள் ஆறிப் பரிமாறப்படும்வரை பொறுத்திருக்க வேண்டுமல்லவா? இது ஒரு வளமையான நடைமுறை ஒளுங்கு அல்லவா?

    ReplyDelete
  5. ஒரு ஈனப்பிறவி.

    ReplyDelete
  6. I don’t think this guy Karuna has enough influence to change Gota’s decision. He is just boasting. Buddhist monks were the real reason behind this cancellation of gazette notification.

    ReplyDelete
  7. THEY MAHINDA GOTHA AND COMPANY USED HIM TO WIPE OUT LTTE AND KILL PRABAKARAN.NOW THEY HAVE THE FULL BAKING OF BUDIST AND WON THE ELECTION WITH BIG MAJORITY.THEY DON'T NEED KARUNAS SUPPORT ANY MORE.AFTER THE NEXT PARLIAMENT ELECTION HE WILL NOT BE SEEN ANY WHERE AND HIS FUTURE IS VERY BLEAK.

    ReplyDelete
  8. வர்த்தமானி அறிவித்தல் வெளிவந்தவுடன் முந்திரிக்கொட்டை போல் இந்த கரிநாய் தானே சாய்ந்தமருதுவிற்கு சபை கொடுப்பதால் தமிழர்களுக்குத்தான் அதிக நன்மை என்று கூறினான். அதுசார்ந்த விடயங்களை இவன் தானே ஊதிப் பெருப்பித்தான். அடே கரிநாயே.. நீ யுத்தகளத்தில் செத்துத் தொலைந்திருந்தால்; தமிழர்களுக்கு இதைவிடப் பெரிய நன்மையெல்லாம் கிடைத்திருக்கும். அஜன் அன்ரெனியின் அக்காவின் கால்களுக்கிடையிலிருந்து உன் தவளைத் தலையை வெளியே எடுத்து உலகத்தைப் பார். அப்பொழுதாவது உனக்கு தெளிவாக சிந்திக்க முடிகிறதா எனப் பார்ப்போம்.

    ReplyDelete

Powered by Blogger.