Header Ads



சின்னம் குறித்து தீர்மானம் இல்லை, இறுதித் தீர்மானம் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படும்.

ஐக்கிய தேசிய முன்னனிணின் பொதுச்செயலாளராக பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டாரவை நியமிக்க முன்வைத்த பரிந்துரைக்கு  ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது.  

எவ்வாறு இருப்பினும் சின்னம் குறித்து எவ்விதமான  தீர்மானங்களும் எட்டப்படவில்லை.

யானை சின்னத்திற்கு பெரும்பாலான உறுப்பினர்களின் ஆதரவு உள்ளமையினால் இந்த யோசனை ஐக்கியதேசிய கட்சியின்   ஆலோசனை குழுவிற்கு விடுக்கப்பட்டு அதன்  தீர்மானத்திற்கு அமைய எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்ற  இறுதி தீர்மானம்   எதிர்வரும் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படும்.

ஐக்கிய தேசிய கட்சியின் இரண்டாவது செயற்குழுக்  கூட்டம்    கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று மாலை   கட்சி தலைமையகத்தில் கூடியது.

இதன்போது இடம்பெறவுள்ள பொதுத்தேர்தலில் எவ்வாறு புதிய  கூட்டணி   செயற்பட வேண்டும். என்றும்  செயற்குழுவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டவர்கள் குறித்தும்  அடுத்த தீர்மானங்களை எடுப்பதும் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டன

இச்செயற்குழு கூட்டத்தில் எதிர்பார்க்கப்பட்ட அளவிற்கு ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் பெரும்பாலும் கலந்து கொண்டனர். செயற்குழுவில் இருந்து நீக்கப்பட்ட  பாராளுமன்ற உறுப்பினர்களான    சரத்பொன்சேனா, அஜித் பி . பெரேரா ஆகியோர்  செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. ஆனாலும் சிறிகொதாவிற்கு வருகை தந்திருந்தார்கள்.

No comments

Powered by Blogger.