Header Ads



எமக்­கான தேசம் இது­வல்ல, என்ற உணர்வு மேலெ­ழு­கின்­றது - சிறி­தரன்

(ஆர்.யசி)

தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடு­வதை அர­சாங்­கமே புறக்­க­ணித்­ததன் மூல­மாக  எமக்­கான தேசம் இது­வல்ல, எமக்­கான தேசி­யக்­கொடி இது­வல்ல என்ற உணர்வு தமி­ழர்­க­ளான எம்­மத்­தியில் எழு­கின்­றது.  ஒரு தேசத்தில், ஒரு தேசிய கொடியில் தமி­ழர்­களை இன்­னமும் ஏற்­றுக்­கொள்­ள­வில்லை என்­பதை சிங்­கள பேரி­ன­வாத தலை­மைகள் வெளிக்­காட்டி விட்­டன என்று  தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு தெரி­வித்­துள்­ளது.  

சுதந்­திர தினத்தில் சிங்­கள மொழியில் மட்­டுமே தேசிய கீதம் இசைக்கப்­படும் என அர­சாங்கம் அறி­வித்­துள்­ளமை தொடர்பில்  தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் கிளி­நொச்சி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எஸ். சிறி­தரன் தெரி­விக்­கை­யி­லேயே இதனைக் குறிப்­பிட்டார்.  

 அவர்  இது  தொட­ர்பில்  மேலும் குறிப்­பி­டு­கையில்,  

தமிழ் மக்கள் இந்நாட்டில் புறக்­க­ணி­கப்­பட்ட மக்கள் என்­பதை    சிங்­கள தரப்­பினர் பல்­வேறு செயற்­பா­டு­களில் வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளனர். 

யுத்­தத்­திற்கு முன்­னரும் சரி யுத்த கால­கட்­டத்­திலும் யுத்தம் முடி­வுக்கு வந்து பத்து ஆண்­டுகள் கடந்தும் சரி சிங்­கள தரப்­புகள் தமது மனங்­களில் இதனை கன­மாக வைத்­துக் ­கொண்டு பய­ணிக்­கின்­றனர். இந்தநாடு தமி­ழர்­க­ளுக்கு அல்ல என சிங்­கள பேரி­ன­வாத சக்­தி­களே கூறிக்­கொண்­டுள்­ளன. அதன் ஒரு வெளிப்­பாடே இப்­போது புதிய அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்­த­வுடன் தமி­ழர்­களின் உரி­மையை பறிக்கும் விதத்தில் முன்­வைக்­கப்­பட்­டுள்ள தமிழ் மொழி தேசி­ய­கீத புறக்­க­ணிப்­பாகும். 

தமிழ் மொழியில் தேசிய கீதம்  பாடு­வ­தற்கு அர­சாங்கம் மறுப்பு தெரி­விக்­கின்­றது என்­பது தமி­ழர்கள் இன்­னமும் இந்த நாட்டின் பிர­ஜைகள் இல்லை என்­பதை அவர்கள் ஏற்­றுக்­கொள்­வ­தா­கவே அமை­கின்­றது. ஒரு தேசம், ஒரு தேசியக்ெகாடி என்ற ஒரு­மித்த உணர்­வு­களை ஏற்­ப­டுத்த சிங்­கள தலை­மைகள் தயா­ராக இல்லை என்­பதை அவர்கள் தெளி­வாகக் கூறி வரு­கின்­றனர். இந்த நாட்­டினை புறக்­க­ணிக்க தமி­ழர்கள் எந்த செயற்­பா­டு­க­ளையும் செய்­ய­வில்லை, ஆரம்பம் முதற்­கொண்டு சிங்­கள தலை­வர்­களே இந்த நாட்டில் தமி­ழர்கள் புறக்­க­ணிக்­கப்­பட வேண்டும் என்ற வகையில் சில செயற்­பா­டு­களில் ஈடு­பட்டு வரு­கின்­றனர். இது வருத்­த­ம­ளிக்கக் கூடிய விட­ய­மாகும்.

  சிங்­கள தலை­மை­களே இவ்­வாறு நடந்­து­கொள்ளும் நிலையில் தமி­ழர்கள் இது குறித்து சிந்­தித்து வேத­னைப்­பட வேண்­டிய அவ­சியம் என்ன என்ற கேள்­வியும் எம்­மத்­தியில் எழு­கின்­றது. எமக்­கான தேசம் இது­வல்ல, எமக்­கான தேசி­யக்­கொடி இலங்கைக் கொடி அல்ல என்ற உணர்வு எம்­மத்­தியில் எழு­கின்­றது. 

இன்­னமும் இந்த நாட்டின் தேசிய கொடியில் ஒருமித்த உணர்வு ஏற்படவில்லை என்பதே உண்மையாகும். தமிழ் மக்களுக்கு இன்னமும் இந்த நாட்டில் அங்கீகாரம் கிடைக்க வில்லை, தமிழர்கள் சுய உரிமைகள் கிடைக்கவில்லை என்பதை புதிய அரசாங்கம் தெளிவாக உணர்த்திவிட்டது என்றார்.

No comments

Powered by Blogger.