Header Ads



கொரோனா சந்தேகம்,, 79 இலங்கையர்களும், 32 சீனர்களும் வைத்தியசாலையில் அனுமதி

(ஆர்.விதுஷா)

உலகில் தரம் வாய்ந்த சுகாதார  சேவை எமது நாட்டில்  வழங்கப்படுவதனாலே கொரோனா நோய்க்கான சிகிச்சையை  அளிக்க  கூடியதாகவிருந்ததுடன், நோய்த் தொற்றை  கட்டுப்படுத்தக்கூடியதாகவும் இருந்தாகவும் சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்தார்.   

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான சீனநாட்டை சேர்ந்த   43  வயதுடைய லுவோ யான் என்ற பெண் கடந்த  மாதம் 25 ஆம் திகதி   அங்கொடை தேசிய தொற்றுநோய் வைத்திய சாலையில்  அனுமதிக்கப்பட்டார்.   

அந்த பெண் முழுமையாக நலமடைந்துள்ளதாக கிடைக்கப்பெற்ற  மருத்துவ பரிசோதனை அறிக்கைக்கு அமைய அவர் இன்று காலை வைத்தியசாலையிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

இவரின் வெளியேற்றத்தின்போது சுகாதார அமைச்சர் பவித்திரா  வன்னியாராச்சியும்அந்த வைத்தியசாலைக்கு சென்றிருந்ததுடன்,  அந்த பெண்ணை தழுக்கொண்டதுடன், மலச் செண்டும் வழங்கினார். 

இதன்போதே உரையாற்றுகையிலேயே சுகாதார அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

தொடர்ந்தும் குறுத்த சீனப் பெண் வைத்தியசாலையில் இருந்த புத்தபிரானின்  உருவச்சிலையையும் வழிபட்டார்.

இதேவேளை வைத்திய சாலையை  விட்டு வெளியேறிய  சீனப்பெண்  இன்று மாலை  கட்டுநாயக்க  விமான நிலையத்தின்  ஊடாக சீனாவை சென்றடைவதற்கான நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சந்தேகிக்கும்   நோயாளிகளில் அதிகமானோர்  அங்கொடை  தேசிய  தொற்றுநோய் வைத்தியசாலையிலேயே சிகிச்சை பெற்றுவருகின்றனர். 

அந்த வகையில் 128 பேர் வரையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  அவர்களில் 79  இலங்கைப் பிரஜைகளும், 32 சீனப் பிரஜைகளும் உள்ளடங்குவதாக வைத்தியர் ஹசித்த அத்தனாயக்க தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.