Header Ads



நான்கரை வருடத்தில் செய்யாததை 60 நாட்களுக்குள் செய்துமுடித்துள்ளோம் - வியாழேந்திரன்

எதிர்ப்பு அரசியல் காரணமாக சாத்தியமான விடயங்களைக்கூட அடையமுடியாத துர்ப்பாக்கிய நிலையினை கடந்த 72வருடங்களாக தமிழ் மக்கள் எதிர்கொண்டுவந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

'நாட்டைக்கட்டியெழுப்பும் சுபீட்சமான நோக்கு'எனும் எண்ணக்கருவிற்கமைய பிரதமர் மகிந்தராஜபக்சவினால் முன்னெடுக்கப்படும் கமட்ட கெயக்-ரட்டட்ட ஹெட்டக் (கிராமத்திற்கு வீடு-நாட்டுக்கு எதிர்காலம்) அடிக்கல் நாட்டு விழா இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்தடித்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போது தமிழ் தலைமைகள் முன்னெடுத்துள்ள எதிர்ப்பு அரசியலால் எதனையும் சாதிக்கமுடியாது. எதிர்கால சந்ததியையும் கையேந்தும் நிலைக்கே அது இட்டுச்செல்லும்.

நான்கரை வருடத்தில் செய்யாததை நாம் 60 நாட்களுக்குள் செய்துமுடித்துள்ளோம், என்று கூறியுள்ளார்.

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரெட்னம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் எஸ்.வியாழேந்திரன்,

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா, மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பிரதேசசெயலக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

No comments

Powered by Blogger.