Header Ads



4 மாணவர்களை வன்புணர்வு செய்த, 47 வயது அதிபர் கைது

நான்கு பாடசாலை மாணவர்களை வன்புணர்வுக்கு உள்ளாகிய சம்பவம் தொடர்பாக பொலன்நறுவை லங்காபுர பிரதேசத்தை சேர்ந்த பாடசாலை அதிபர் ஒருவர் இன்று -17- கை, செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மன்னம்பிட்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவரை எதிர்வரும் மார்ச் மாதம் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைலக்குமாறு நீதவான் சுரங்க அசேல டி சில்வா உத்தரவிட்டுள்ளதாக புலஸ்திபுர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலன்நறுவை வெவ்தென்ன பிரதேசத்தை சேர்ந்த 47 வயதான சந்தன கருணாதிலக்க என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பொலன்நறுவை புலஸ்திபுர பொலிஸ் பிரிவில் நான்கு சிறுவர்கள் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை செய்த முறைப்பாட்டுக்கு அமைய பொலிஸார் சந்தேக நபரான பாடசாலை அதிபரை கைது செய்துள்ளனர்.

1 comment:

  1. وَاِنْ خِفْتُمْ اَلَّا تُقْسِطُوْا فِى الْيَتٰمٰى فَانْكِحُوْا مَا طَابَ لَـكُمْ مِّنَ النِّسَآءِ مَثْنٰى وَثُلٰثَ وَرُبٰعَ‌ ‌ فَاِنْ خِفْتُمْ اَلَّا تَعْدِلُوْا فَوَاحِدَةً اَوْ مَا مَلَـكَتْ اَيْمَانُكُمْ‌ ذٰ لِكَ اَدْنٰٓى اَلَّا تَعُوْلُوْا ‏ 
    அநாதை(ப் பெண்களை திருமணம் செய்துகொண்டு, அவர்)கள் விஷயத்தில் நீதமாக நடக்க மாட்டோம் என நீங்கள் அஞ்சினால், மற்ற பெண்களில் உங்களுக்கு விருப்பமானவர்களை இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நான்கு நான்காகவோ நீங்கள் திருமணம் செய்து கொள்ளலாம். (அவ்வாறு பலரை திருமணம் செய்தால் அப்போதும் அவர்களுக்கிடையில் நீங்கள் நீதமாக நடந்துகொள்ள வேண்டும். அவ்வாறு) நீங்கள் நீதமாக நடக்க முடியாதென பயந்தால் ஒரு பெண்ணை (திருமணம் செய்துகொள்ள வேண்டும்.) அல்லது நீங்கள் வாங்கிய அடிமைப் பெண்ணையே (போதுமாக்கிக்) கொள்ளுங்கள். நீங்கள் தவறு செய்யாமலிருப்பதற்கு இதுவே சுலபமா(ன வழியா)கும்.
    (அல்குர்ஆன் : 4:3)

    ඔබ අනාථ දරුවන්ට (කාන්තාවන් විවාහ කර ගැනීම) සාධාරණය ඉටු නොකරනු ඇතැයි ඔබ බිය වන්නේ නම්, ඔබට වෙනත් කාන්තාවන් තුළ ඔබේ ප්‍රියතම කාන්තාවන් දෙදෙනෙකු, තුනක්, හතරක් හෝ හතරක් විවාහ කර ගත හැකිය. ඔබට හරි දේ කළ නොහැකි යැයි ඔබ බිය වන්නේ නම්, ඔබ මිලදී ගත් කාන්තාවක් (විවාහක) හෝ වහල් දැරියක් විවාහ කර ගත යුතුය. වැරැද්දක් නොකිරීමට ඔබට ඇති පහසුම ක්‍රමය මෙයයි.
    (අල් කුර්ආනය: 4: 3)

    ReplyDelete

Powered by Blogger.