February 09, 2020

முஸ்லிம்களுக்கு 3 வழிகள்தான் உள்ளது.

நேற்று -08- சென்னை பட்டினப்பாக்கத்தில் நடைபெற்ற CAA எதிர்ப்பு மாநாட்டில்,  அடையார் பள்ளி இமாம் மௌலானா சதீதுதீன் பாகவி தனக்கே உரிய கம்பீர குரலில் பேசிய பேச்சு வேற லெவல்.

CAA, NRC சட்டம் கொண்டு வந்தால் முஸ்லிம்களுக்கு மூன்று வழிதான் உள்ளது.

1. அகதி முகாமுக்கு செல்வது.
2. மதம் மாறுவது.
3. போராடுவது.

# இந்த நாட்டிற்காக உயிர் கொடுத்து போராடிய நாங்கள் நிச்சயம் அகதி முகாமுக்கு செல்ல மாட்டோம். அப்படி செல்வதாக இருந்தால், உன் கும்பலையும் சேர்த்தே இழுத்து செல்வோம்.

# அற்ப வாழ்வுக்காக மதம் மாறுவோம் என எங்களை எண்ணி விடாதே! 
நாங்கள் பிறக்கும்போதே "லாயிலாஹா இல்லல்லாஹ்" (வணக்கத்துக்குரியவன் அல்லாஹ்வை தவிர வேறு யாருமில்லை) என காதில் கூறக்கேட்டவர்கள்..
இறக்கும்போதும் அந்த வார்த்தையை கூறி உயிர் பிரிய வேண்டுமென அனுதினமும் பிரார்த்தனை செய்து கொண்டிருப்பவர்கள்..

உயிரை விடுவோமே தவிர உன் திட்டத்திற்கு வரமாட்டோம்.

# இறுதி வழி போராடுவது. அதுவும் இந்நாட்டு சட்டத்திற்கு உட்பட்டு. 
வேலூரிலிருந்து தொப்பி போட்ட ஒருவனையும், பால்வளத்தையும் முஸ்லிம்களுக்கு எதிராக பொங்கவைத்து எங்களை கலவரம் செய்ய சீண்டுகின்றனர்.
ஆனால் முஸ்லிம்கள் நாங்கள் அறவழியிலேயே போராடுகிறோம், போராடுவோம்.!

அடிமீது அடிவைத்தால் அம்மியே நகரும். அமித்ஷா நகரமாட்டாரா..?
நகர்ந்து தான் ஆக வேண்டும்.!

இப்போது பாஜகவுக்கு டப்பிங் பேச ரஜினி வேறு வந்துள்ளார். அதுவும் ஆலிம்களை சீண்டுகிறார். 
இந்நாட்டு விடுதலைக்காக ஆங்கில வழி கல்வி படிப்பதையே ஹராம் என ஃபத்வா கொடுத்தவர்கள் ஆலிம்கள். 14ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆலிம்கள் இந்நாட்டு விடுதலைக்காக உயிரை விட்டுள்ளார்கள். RSSல் இருந்து 14பேர் கூட போராட வரவில்லை. 
இந்த வரலாறு எதுவும் அவருக்கு தெரியாது. 
ஏனெனில்! சொல்வதை அப்படியே கேட்டு டப்பிங் பேசுபவர் தான் ரஜினி.

இந்த மதவெறி கும்பல் எதற்கெடுத்தாலும் எங்களை பாகிஸ்தான் போகச் சொல்கிறார்கள்..
ஏன்டா! பாகிஸ்தானில் எங்க மாமியார் வீடா இருக்கு! ஏன்டா நாங்க அங்கு போகனும்?
கப்ருஸ்தான் வேண்டுமானாலும் போவோமே தவிர பாகிஸ்தான் போக மாட்டோம்.

ஒன்றை தெரிந்துக் கொள்!

நாங்கள் வீதிக்கு வரமாட்டோம். வந்துவிட்டால் வெற்றி அடையாமல் வீடு திரும்ப மாட்டோம்!
அதுதான் எங்களது வரலாறு.!

சாவார்க்கரின் பேரர்கள் இனிதான் இங்கு ஹைதர் அலிகளை காண்பார்கள்!

என நேற்றைய மாநாட்டில் மௌலானா அவர்கள் பேசிய பேச்சு கேட்டவர்களுக்கு உற்சாகத்தையும் உத்வேகத்தையும் தந்தது.

சுருக்கமா சொல்லனும்னா நேற்றைய மாநாட்டில் மௌலானா தான் ஹீரோ..!

பாரூக் சைதாப்பேட்டை

4 கருத்துரைகள்:

எதை எடுத்தாலும் போராடு, சாவு என்று எங்கப்பா சொல்லப்பட்டிருக்கு.
தொழுகையைக் கொண்டும் பொறுமையைக் கொண்டும் உதவி தேடுங்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறதே. இதற்கு உருவம் கொடுக்க யாரும் தயாரில்லையா?
போராடத்தான் தயாரா?

இத்தகைய அனைத்துத் தடைகளையும் தாண்டி அல்லாஹ் எமக்கு நிம்மதியான வாழ்க்கையைத் தரமாட்டான் எனும் நம்பிக்கையின் வெளிப்பாடே இத்தகைய வீரகாவியங்கள்.

சமூகத்தில் ஹீரோ ஆகவேண்டுமெனும் நோக்கத்தைக் கொண்டோரின் பேச்சுக்கள் இவ்வாறுதான் இருக்கும்.

எத்தனையோ போர்களைச் செய்த நபி (ஸல்) அவர்கள் எந்தக் கணத்திலும் இவ்வாறு பேசவுமில்லை, மக்களை இவ்வாறு தவறாக வழிநடாத்தவுமில்லை.

Mr, Aashiq, the battles met with the beloved Prophet all jokes? of waste?

Mr. Amirlebbe,
நான் இங்கு பிட்டுபிட்டு விபரமளிக்க விரும்பவில்லை. நபி அவர்களின் போர்ப் பயணத்தை நகைப்புக்கிடமாகவோ அல்லது வீணாகவோ எந்தவொரு முஸ்லிமும் எடுத்துக்கொள்ளமாட்டான். நீங்கள் அவ்வாறு விளங்கிக் கொள்வது உங்களின் கருத்து. நீங்கள் பார்க்கும் கோணலில் தான் ஒவ்வொரு கருத்தும் உள்ளது.
அன்று எதிரிகள் நபி அவர்களை தமது தஃவா பணியைச் செய்வதற்கோ, பள்ளிவாசல்களுக்குச் செல்வதற்கோ, வாழ்வதற்கோ விடவில்லை. துன்பங்களை் கொடுத்தார்கள். அவ்வாறிருந்தும் அல்லாஹ்வின் கட்டளை கிடைத்த பின்னர்தான் போர் செய்தார்கள். அதற்குக் காரணம் மனித உயிர் பெறுமதி மிக்கது என்பதுதான். அவைகளெல்லாம் அல்லாஹ்வுக்குரியது. பூமியில் குழப்பம் செய்ய வேண்டாம் என்றுதான் இஸ்லாம் கற்றுத்தந்துள்ளது. நற்குணங்களெல்லாம் இஸ்லாத்திற்குரியது, எனவே அவற்றை எங்கு காண்பித்தாலும் நாம் வெற்றிபெறலாம்.

Post a comment