Header Ads



350 ஓட்டங்கள் விளாசி, அவிஷ்க தரிந்து புதிய சாதனை


பாட­சா­லைகள் அணி­க­ளுக்­கி­டையில் நடை­பெற்­று­வரும் 19 வயதிற்­குட்பட்­டோ­ருக்­கான கிரிக்கெட் சுற்றுப்போட்­டியில் அவிஷ்க தரிந்து 350 ஓட்­டங்­களை விளாசி புதிய சாத­னையைப் படைத்துள்ளார்.

லும்­பினி கல்­லூ­ரிக்கு எதி­ராக நடை­பெற்ற போட்­டியில் வத்­தளை சென்.அந்­தனிஸ் கல்­லூரி வீர­­ரான அவிஷ்க தரிந்து 285 பந்­து­களில் 350 ஓட்­டங்­களைப் பெற்­றுள்ளார். 

இதில் 56 பவுண்­ட­ரி­களும் 3 சிக்­ஸர்­களும் அடங்கும்.

அவிஷ்­கவின் இந்த ஓட்ட எண்­ணிக்­கை­யா­னது பாடசா­லைகள் கிரிக்­கெட்டில் 19 வய­திற்­குட்பட்­டோ­ருக்­கான போட்­டியில் ஒரு வீரர் பெற்ற அதி­கூ­டிய ஓட்­ட­மாக சாதனை படைத்­துள்­ளது.

அவிஷ்­கவின் 350 ஓட்டங்­க­ளுடன் சென்.அந்தனிஸ் அணி 514 ஓட் டங்களைக் குவித்தமை குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன் தம்­மிக்க வாஸ் – 310 (1996), இந்­திக்க டி சேரம் – 304 (1993), ஜக் அண்­டர்சன் – 291 (1917) ஆகியோர் ஓட்­டங்கள் வீதம் பெற்­றி­ருந்­தனர்.

No comments

Powered by Blogger.