Header Ads



ஐ.நா மனித உரிமை பேரவை 30/1 தீர்மானத்தில் இருந்து விலக அரசாங்கம் தீர்மானம்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/ 1 தீர்மானத்தில் இருந்து விலகுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதனை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.

இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்தாருக்கு அமெரிக்கா பயணத்தடை விதித்துள்ளது.

இதனை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள்  மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட 30/1 பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்கியமை மிகப்பெரிய காட்டிக்கொடுப்பு என, அந்த அறிக்கையில் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இலங்கை படையினர் மனித உரிமைகளை மீறியதாகக் குற்றம் சுமத்தப்பட்டு தயாரிக்கப்பட்ட அறிக்கை அந்த பிரேரணையில் அங்கீகரிக்கப்பட்டிருந்ததாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.

1 comment:

  1. ஒட்சிசன் அவசியப்படாத இந்த நாட்டில் காற்றை தேவைப்பட்டால் சாப்பிட்டு, காபனீர் ஒக்ஸைட்டை வௌியிடும் மக்கள் நிறைந்த ஒரு நாட்டை உருவாக்கும் பணியின் முதல் கட்டம் தான் இந்த பிரதமரின் உருக்கமான வேண்டுகோள். ஐ.நா. சபையில் இருந்து வௌியேறினால் எங்களுக்கு சகல உதவிகளையும் செய்ய சோமாலியா காத்திருக்கின்றது. எனவே பொதுமக்கள் இதுபற்றி எந்த அச்சமும் கொள்ளத் தேவையில்லை.

    ReplyDelete

Powered by Blogger.