Header Ads



கொரோனா காரணமாக 24,589 பேர் பலி, சீனா உண்மையை மறைக்கிறது. தாய்வான் செய்தி நிறுவனம்

சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தவர்களின் உண்மையான எண்ணிக்கையை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ள விபரங்களுடன் ஒப்பிடும் போது பாரிய வித்தியாசம் இருப்பதை  தாய்வான் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

சீனாவில் இருக்கும் இரண்டாவது பெரிய நிறுவனமான Tencent நிறுவனம் அறியாமல் கொரோனா வைரஸ் சம்பந்தமான புள்ளிவிபரங்களை வெளியிட்டுள்ளதாக தாய்வான் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

Tencent நிறுவனம் ஏற்பட்டுள்ள தொற்று நோய் நிலைமை சம்பந்தமான தகவல்கள் அடங்கிய இணைய பக்கத்தில் கொரோனா வைரஸ் காரணமாக 24 ஆயிரத்து 589 பேர் இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 23 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இது சீன அரசாங்கம் சர்வதேசத்திற்கு மறைக்கும் உண்மையான புள்ளிவிபரமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது

கொரோனா வைரஸ் சம்பந்தமான தகவல்களை வெளியிட்டுள்ள Tencent நிறுவனத்தில் சீன அரசாங்கமே அதிகமான பங்குகளை கொண்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தவுடன் சீனா அரசாங்கம் தனது நாட்டு மக்களுக்கு மாத்திரமல்லாது சர்வதேசத்திற்கும் உண்மையை மறைத்தமை சம்பந்தமாக கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக 563 பேரே உயிரிழந்துள்ளதாக சீனா அரசாங்கம் அறிவித்தள்ளது.

No comments

Powered by Blogger.