Header Ads



பில்­லியன் கணக்கில் கடனை வைத்­து­விட்டே UNP வீடு சென்­றுள்­ளது - தினேஷ்

இந்த நாட்டை சிறந்­த­தொரு நிலைக்கு கட்­டி­யெ­ழுப்ப ஒரு பல­மான பாரா­ளு­மன்றம் தேவைப்­ப­டு­கின்­றது.  புதிய பாரா­ளு­மன்­றத்தில் ஒரு வரவு, செல­வுத்­திட்­டத்தை முன்­ வைத்து அத­னூ­டாக   நாட்டின் அபி­வி­ருத்­தியை   முன்­னெ­டுக்­க­வுள்ளோம் என்று வெளி­வி­வ­கார அமைச்சர் தினேஷ் குண­வர்­தன தெரி­வித்தார்.  

கடந்த  5ஆம் திகதி பின்­ன­வல பிர­தே­சத்தில் நடை­பெற்ற நிகழ்­வொன்றில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே   அவர் இதனைக் குறிப்­பிட்டார். அவர் மேலும் அங்கு உரை­யாற்­றுகையில்;

கடந்த ஜனா­தி­பதி தேர்­தலில்  ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­ப­க் ஷவை வெற்­றி­பெற செய்த அதற்கு ஒத்­து­ழைப்பு வழங்­கிய   அனைத்து மக்­க­ளுக்கும்  நன்றி தெரி­விக்­கின்றோம்.  கடந்த நான்­கரை வரு­ட­மாக இந்த நாடு  படு­பா­தா­ளத்­திற்கு  தள்­ளப்­பட்­டது.  வெளி­நாட்டு சக்­தி­களின் கட்­ட­ளை­க­ளுக்கு கீழ்­பட்டு  செயற்­பட்ட ஒரு துர­திஷ்­ட­மான காலப்­ப­கு­தி­யாகும்.

நாட்டின் விவ­சாயம்   அரா­ஜ­க­மான நிலை­மைக்கு  ஐ.தே.க. அர­சாங்­கத்­தினால் கொண்­டு­செல்­லப்­பட்­டது. தற்­போது இந்த நாட்டின் எதிர்­காலம் தொடர்பில் ஒரு புதிய எதிர்­பார்ப்பு ஏற்­பட்­டி­ருக்­கி­றது. இந்த நாட்டு மக்­களின் முத­லா­வது நம்­பிக்­கை­யாக   நம்­பிக்­கை­யுள்ள நாட்டை கட்­டி­யெ­ழுப்­பு­வதே காணப்­ப­டு­கின்­றது இதன் அடிப்­ப­டை­யி­லேயே  ஜனா­தி­பதி  செயற்­பட்டு வரு­கின்றார்.

எமது அர­சாங்கம் வரிச்­ச­லு­கை­களை வழங்­கி­யி­ருக்­கி­றது. பல வரிகள்  குறைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன.  எனவே எமக்கு இந்த நாட்டை சிறந்­த­தொரு நிலைக்குக் கட்­டி­யெ­ழுப்ப ஒரு பல­மான பாரா­ளு­மன்றம் தேவைப்­ப­டு­கின்­றது. புதிய பாரா­ளு­மன்­றத்தில் ஒரு வரவு, செல­வுத்­திட்­டத்தை முன்­வைத்து அத­னூ­டாக   நாட்டின் அபி­வி­ருத்­தியை முன்­னெ­டுக்­க­வுள்ளோம்.

பில்­லியன் கணக்கில்  கடனை வைத்­து­விட்டே  ஐக்­கிய தேசி­யக்­கட்சி  வீடு சென்­றுள்­ளது. வங்­கி­க­ளுக்கு செலுத்த வேண்­டிய பில்­லி யன் கணக்­கி­லான  நிதியைப் பெற மின் சாரக்கட்டணத்தை  அதிகரிக்குமாறு  ஆலோ சனை வழங்கப்படுகின்றது. ஆனால் அவ் வாறு மின்சாரக்கட்டணத்தை அதிகரிக்க மாட் டோம். மக்களின் எதிர்பார்ப்பை நிறை வேற்ற எமது அரசாங்கம்  நடவடிக்கை எடுக்கும் என்றார்.

No comments

Powered by Blogger.