Header Ads



UNP தலைமைத்துவம் யாரென்பதை, இவ்வாரத்திற்குள் தீர்மானிப்பது அவசியமாகும் - மனோ

ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒன்றினைத்து எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான கூட்டணி தோற்றுவிக்கப் பெறும்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவம் யாருக்கு என்பதை இவ்வாரத்திற்குள் தீர்மானிப்பது அவசியமாகும் என  பாராளுமன்ற உறுப்பினர் மனோகனேஷன் தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள கண்காட்சி மற்றும் காட்சிப்படுத்தல் அரங்கில் இன்று எதிர்க்கட்சி  தலைவர் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில்  கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு  குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசிய முன்னணியின் நோக்கம் தொடர்பில்  கலந்தாலோசிப்பதே  எமது பிரதான இலக்காகும். பொதுத்தேர்தலில்  பலமான கூட்டணியின் ஊடாகவே  போட்டியிடுவோம். ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கைக்கு ஒருபோதும் முரணாக செயற்பட மாட்டோம்.

போலியான வாக்குறுதிகளை வழங்கி அப்பாவி மக்களை ஏமாற்றி  அரசாங்கம் ஆட்சியமைத்துக் கொண்டது. அரசாங்கத்தின் சுய ரூபம் நாளாந்தம் வெளிப்பட்டுக் கொண்டு வருகின்றது. அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தை முன்வைத்தே அரசாங்கம் அதிகாரத்தை பெற்றுக் கொண்டது. எம். சி. சி. ஒப்பந்தம் குறித்து  ஆராய்ந்து அந்நிறுவனம் வழங்கும் நன்கொடை நிதியினை பெற்றுக் கொள்ளவுள்ளது.

இன, மத,  மொழிகளுக்கிடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது.தோற்றுவிக்கப்பட்ட தேசிய  நல்லிணக்கம் இன்று இனவாத தேவைகளுக்காக பயன்படுத்திக் கொள்ளப்படுகின்றது.தேசிய பொருளாதாரமும்  வீழ்ச்சியடைந்துள்ளது.

வடக்கு  கிழக்கு மற்றும் தெற்கு ஆகிய அனைத்து மாகாணங்களிலும் வெற்றிப் பெற்று பலமான அரசாங்கத்தை அமைக்க வேண்டிய தேவை  காணப்படுகின்றது.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவின்  தலைமையில் பலமான கூட்டணி தோற்றம் பெறும். போலியான வாக்குறுதிகளை வழங்கி  அதிகாரத்தை ஒருபோதும் வெற்றுக் கொள்ளமாட்டாம்.

ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் செலுத்தும் அனைவரும் ஒன்றினைந்து எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவின் தலைமையில் கூட்டணி அமைகக்ப்படும்.

கூட்டணியின் ஊடாகவே பொதுத்தேர்தலை எதிர்க் கொள்வோம்.  ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கைக்கு ஒருபோதும் பாதிப்பினை ஏற்படுத்த மாட்டோம். தலைமைத்துவம் தொடர்பான தீர்மானம் காலம் தாழ்த்தாது  ஐக்கிய தேசிய கட்சி அறிவிக்க வேண்டும்.

No comments

Powered by Blogger.